போராட்டம் என்ற பெயரில் பொது இடங்களை நாள்கணக்கில் ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது: SC

2020 அக்டோபரில் ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை எதிர்ப்பு சட்ட போராட்டங்கள் சட்டவிரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 13, 2021, 03:58 PM IST
  • 2020 அக்டோபரில் ஷாஹீன் பாக் CAA எதிர்ப்பு போராட்டங்கள் சட்டவிரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • பொது ஆர்ப்பாட்டங்கள் "இதற்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும்" நடக்க வேண்டும்
போராட்டம் என்ற பெயரில் பொது இடங்களை நாள்கணக்கில் ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது: SC title=

புதுடெல்லி: போராட்டங்கள் என்கிற பெயரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப் பட்டிருக்கும் பொது இடங்களை ஆக்கிரமித்து கொண்டு நாள்கணக்கில், மாதக்கணக்கில் என போராடுவதை அனுமதிக்க முடியாதுஎன்று உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது. 
.
ஷாஹீன் பாக் நகரில் நடைபெற்ற குடியுரிமை சட்ட (CAA) எதிர்ப்பு போராட்டங்கள் சட்டவிரோதமானது என்ற உச்சநீதிமன்றத்தின் கடந்த ஆண்டு அக்டோபர் மாத தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி 12 ஆர்வலர்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.

"போராட்டம் நடத்தும் தெரிவிக்கும் உரிமை என்பது எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போராட்டம் தெரிவிக்கலாம் என்ற வகையில் இருக்க முடியாது.  போராட்டம் என்பது மற்றவர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில், பொது இடத்தை தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டு போராட முடியாது" என்று நீதிபதிகள் எஸ்.கே. கவுல், அனிருத்த போஸ் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர்  அடங்கிய நீதிமன்ற பிரிவு, கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி ஷாஹீன் பாக் குடியிருப்பாளர் கனிஸ் பாத்திமா மற்றும் பலர் அளித்த மனுவை தள்ளுபடி செய்தபோது இதை தெரிவித்தனர். 

மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், போராட்டங்கள் என்ற பெயரில் பொது இடங்களை ஆக்கிரமிக்க முடியாது என்றும், பொது ஆர்ப்பாட்டங்கள் "இதற்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும்" நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விவசாயிகள் போரட்டம்  (Farmers Protest) தில்லி எல்லைகளில் பல நாட்களாக நடந்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. முக்கிய நெடுஞ்சாலைகளை அடைத்துக் கொண்டு போரட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், பொது மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, தொழில்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வேலைவாய்ப்புகளை பலர் இழந்துள்ளனர்.

ALSO READ | போலி செய்திகள், இந்திய எதிர்ப்பு பதிவுகள்; Twitter மத்திய அரசுக்கு SC நோட்டீஸ்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News