சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி வருகிறது. கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியர்களின் கணக்குகளில் இருந்து 1207 மில்லியன் சுவிஸ் பிராங்க் நேரடியாக பண பரிவர்த்தனை மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தற்போது இந்தியர்களின் கணக்குகளில் இருக்கும் தொகை மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. இந்தியர்களின் பணம் ரூ.8392 கோடியாக குறைந்துள்ளது