தெலுங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கூடுதலாக துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ராஜ்பவனில் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் கலந்து கொண்டார். அப்போது, கோசாலையில் இருந்த மாடு ஒன்றுக்கு தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து, பழம் கொடுக்க முயன்றுள்ளார்.
ALSO READ | இலங்கையின் முக்கிய தமிழ் பிரதிநிதிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்: விவரம் உள்ளே
அந்த நேரத்தில் மாடு, திடீரென ஆளுநர் தமிழிசையை முட்ட முற்பட்டுள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர், மாட்டிடம் இருந்து தள்ளிச் சென்று, மாலையை மற்றொருவர் அணிவிக்குமாறு கொடுத்துள்ளார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இப்போது இணையத்தில் இப்போது பரவியுள்ளது. அந்த வீடியோவில் மேற்கூறியதுபோலவே, பூஜை முடிந்த பிறகு, மாட்டுக்கு மாலை, அணிவித்து பழம் கொடுக்க முயல்கிறார் தமிழிசை. முதலில் மாட்டுக்கு பொட்டு வைக்கும் அவர் பின்னர் மாலை அணிவிக்க முற்படுகிறார்.
தெலங்கானா ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவின்போது ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை மாடு முட்ட முயன்றதால் பரபரப்பு.
அருகில் இருந்தவர்கள் சுதாரித்து நிலைமையை சரி செய்தனர்.#ZeeTamilNews | #Telangana | #Governor | #TamilisaiSoundararajan pic.twitter.com/2TvvBDyXGd
— Zee Tamil News (@ZeeTamilNews) January 19, 2022
ALSO READ | கோவையில் கஞ்சா விற்பனை செய்த தென்னாப்பிரிக்க மாணவர் கைது
அப்போது, தலையை கீழே குணிந்தவாறு இருக்கும் மாடு, ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்தவுடன் திடீரென தலையை மேலே தூக்கி அவரை நோக்கி முட்டச் செல்கிறது. உடனடியாக தள்ளிச் சென்ற அவர், அருகில் இருந்தவர்களிடம் மாலையை மாட்டுக்கு அணிவிக்குமாறு கொடுக்கிறார். இதன்பின்னர், மாட்டுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR