5 நிமிடத்தில் தில்லியை தாக்க முடியும் -"அப்துல்காதீர் கான்"

-

Last Updated : May 30, 2016, 01:16 PM IST
5 நிமிடத்தில் தில்லியை தாக்க முடியும் -"அப்துல்காதீர் கான்"  title=

இஸ்லாமாபாதில் நடைபெற்ற 18ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நினைவுப் பொதுக் கூட்டத்தில் பேசிய அணு விஞ்ஞானி அப்துல் காதீர்கான் தெரிவித்தது:-

பாகிஸ்தானால் அணு ஆயுத வல்லமை கொண்ட நாடாக 1984-ம் ஆண்டே ஆயிருக்கும். பாகிஸ்தானிடம் அப்போதே அதற்கான திறமை இருந்தது. அதன்படி, 1984ஆம் ஆண்டில் அணு ஆயுத சோதனை நடத்த நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்த ஜியா உல் ஹக் அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அணு ஆயுத சோதனை நடத்தினால் சர்வதேச நாடுகள் ராணுவரீதியில் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும்,  பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் நிதியுதவி அளித்துவந்தன. அந்த நேரத்தில் பாகிஸ்தான் அணு ஆயுதச் சோதனை நடத்தினால் சர்வதேச நாடுகள் நிதியுதவியை நிறுத்திவிடக் கூடும் என ஜியா உல் ஹக் கருதினார். இதனால் அப்போது அணு ஆயுத சோதனை கைவிடப்பட்டது.

எனது சேவைகள் இல்லையெனில் பாகிஸ்தானால் அணு ஆயுத வல்லமை கொண்ட முதல் முஸ்லிம் நாடு என்ற அந்தஸ்து  கிடைத்திருக்காது.  பாகிஸ்தானில் இருக்கும் அணு ஆயுத விஞ்ஞானிகளுக்கு அவர்களின் திறமைக்குரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. பாகிஸ்தான் அரசு என்னை நடத்திய விதம் எனக்கு வருத்தமளிக்கிறது. 

ககுதாவில் இருந்து டில்லியியை வெறும் மீது 5 நிமிடங்களில் பாகிஸ்தானால் தாக்க முடியும். அதற்கான திறன் பாகிஸ்தானிடம் உள்ளது என்றார் அப்துல் காதீர்கான்.

பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்தை லிபியா, ஈரான் நாடுகளுக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் 2004-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கை கடந்த 2009ஆம் ஆண்டில் விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுவதற்கு அப்துல் காதீர்கான் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இவர் பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படுகிறார்.

Trending News