மத்திய அரசு நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது, இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக, முறையாக டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 69 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஏர் இந்தியா மகாராஜா டாடா நிறுவனத்திடம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்குச் செல்வதற்கு முன்னதாக, டாடா குழுமத்தின் கீழ் ஏர் இந்தியா உலக அளவில் பல சாதனைகளைப் படைத்தது. புகழ்பெற்ற தொழிலதிபரும் இந்தியாவின் முதல் வணிக உரிமம் பெற்ற விமானியுமான ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதபோய் டாடா விமான நிறுவனத்தை துவங்கினார். டாடா குழுமம்-ஏர் இந்தியா உறவு 1932ம் ஆண்டில் உருவானது. தனது பயணிகள் விமான சேவைகளை 1938ம் ஆண்டில் வெளிநாடுகளுக்கும் விரிவாக்கியது, டாடா நிறுவனம்.
1953 ஆம் ஆண்டில் விமான நிறுவன சட்டத்தின் மூலம், டாடா சன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்திய அரசாங்கம், அதனை நாட்டுடமையாக்கியது. இப்போது 69ஆண்டுகளுக்கு பிறகு உரிமையைப் பெற்றுள்ள நிலையில், டாடா சன்ஸ் தனது பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த சிறந்த சேவையை வழங்க உறுதி பூண்டுள்ளது.
மேலும் படிக்க | Air India: 69 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டாடா வசம் சென்ற ஏர் இந்தியா மகாராஜா!
டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் ஏர் இந்தியாவின் ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு உணர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார், "ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவையில், மிக சிறந்த வகையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதோடு, AI உலகின் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட விமான நிறுவனமாக இருக்க வேண்டும்" என்று நாங்கள் விரும்புகிறோம். நஷ்டம் தரும் ஒப்பந்தமாக கருதப்படும் ஏர் இந்தியா நிறுவனத்தின் வர்த்தகத்தை லாபகரமாக மாற்ற டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது இதன் மூலம் தெளிவாகிறது.
மேலும் படிக்க | டாடா வசம் செல்லும் ஏர் இந்தியா; கேபின் குழுவிற்கு BMI - உடல் எடை சோதனை கட்டாயம்!
ஏர் இந்தியாவின் உரிமையைப் பெற்ற பிறகு, டாடா குழுமம் அது தொடர்பான நினைவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். சமீபத்தில், நிறுவனர் ஜேஆர்டி டாடா நிறுவனத்திற்கு ஏர் இந்தியா என்று பெயரிட ஊழியர்களிடமிருந்து பரிந்துரைகளைக் கோரியதாகவும், அவர்கள் வாக்களித்ததன் அடிப்படையில் நிறுவனத்திற்கு 'ஏர் இந்தியா' என்று பெயரிடப்பட்டதாகவும் நிறுவனம் கூறியது. ஏலத்தில், சுமார் 18000 கோடி ரூபாய் ரூபாய்க்கு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தனியார் மயமானது ஏர் இந்தியா... 18000 கோடி ரூபாய்க்கு விற்பனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR