Air India: 69 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டாடா வசம் சென்ற ஏர் இந்தியா மகாராஜா!

 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 27, 2022, 04:50 PM IST
Air India: 69 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டாடா வசம் சென்ற ஏர் இந்தியா மகாராஜா!  title=

 

மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. இதில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து. அது தொடர்பான ஏலத்தில் வென்ற டாடா நிறுவனத்திற்கு   ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வை டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டெட் என்ற நிறுவனம் வாங்கியது. 

இந்நிலையில், இன்று ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக, முறையாக டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஏர் இந்தியாவை முழுமையாகன் ஒப்படைத்த நிலையில், டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், ஏர் இந்தியா  மீண்டும்எங்கள் வசம் வந்து சேர்த்ததில் நிறுவனம் "மகிழ்ச்சியாக" இருப்பதாகக் கூறினார். மேலும், நிறுவனம் "உலகத் தரம் வாய்ந்த விமான சேவையை"  தரும் வகையில் பணியாற்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார்.

“ஏர் இந்தியா நிறுவனத்தை ஒப்படைக்கும் செயல்முறை நிறைவடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் & ஏர் இந்தியாவை மீண்டும் டாடா குழுமத்தில் இணைந்துள்ள நிலையில், உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை அளிக்க அனைவருடனும் இணைந்து பணியாற்ற வேண்டுமென நாங்கள் எதிர்நோக்குகிறோம்," என்று அவர் கூறியதாக செய்தி நிறுவனமான ANI தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற தொழிலதிபரும் இந்தியாவின் முதல் வணிக உரிமம் பெற்ற விமானியுமான ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதபோய் டாடா விமான நிறுவனத்தை துவங்கினார். டாடா குழுமம்-ஏர் இந்தியா உறவு 1932ம் ஆண்டில் உருவானது. தனது பயணிகள் விமான சேவைகளை 1938ம் ஆண்டில் வெளிநாடுகளுக்கும் விரிவாக்கியது டாடா நிறுவனம். 

டாடாவால் தோற்றுவிக்கப்பட்ட விமான நிறுவனம்நிறுவனங்களின் பெயர் டாடா ஏர் டாடா ஏர்லைன்ஸ் என மாற்றப்பட்டது. புகழ்பெற்ற விமான நிறுவனமானது, பர்மாவில் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராயல் விமானப்படைக்கு ஆதரவாக செயல்பட்டது.

போர் முடிந்தவுடன், விமான நிறுவனம், தனது பெயரை மாற்றியது. அப்போது வைக்கப்பட்டதுதான் ‘ஏர் இந்தியா’ மத்திய அரசு விரைவில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்கியது. 1953 ஆம் ஆண்டில் விமான நிறுவன சட்டத்தின் மூலம், டாடா சன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்திய அரசாங்கம், அதனை நாட்டுடமையாக்கியது.

ALSO READ  | தனியார் மயமானது ஏர் இந்தியா... 18000 கோடி ரூபாய்க்கு விற்பனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News