தெலுங்கானாவில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், இன்று ஆளுநரை சந்திக்க உள்ளார்.
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் 2019 ஏப்ரல் மாதம் ஐந்தாண்டு ஆட்சி முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் பொது தேர்தலும் நடைபெற உள்ளது. எனவே தெலுங்கான சட்டசபை தேர்தல் மற்றும் பொது தேர்தல் ஒன்றாக நடக்க வாய்ப்புகள் மிக அதிகம்.
இந்நிலையில், தெலுங்கானா சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு, இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி கட்சி.
இதுக்குறித்து விவாதிக்க தெலுங்கானா மாநில ஆளுநரை, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ராஷ்ட்ரிய சமிதி கட்சி முக்கிய நிர்வாகி, வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு முதல்வர் சந்திரசேகர ராவ், ஆளுநரை சந்திக்க உள்ளார் என நேற்று தெரிவித்தார்.
இன்று மதியம் தெலுங்கானா மந்திரி சபை கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பின்னர் தெலுங்கானா முதல்வர் ஆளுநரை சந்திக்கலாம் எனத் தெரிகிறது.