ஹைதராபாத்: கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளனர். மேலும் சமூக தூரத்தை பின்பற்றுகிறார்கள். இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல பிரச்சினை சந்தித்து வருகின்றன. அவர்களுக்கு ஊரடங்கு உத்தரவை சமாளிப்பது மிகப்பெரிய பிரச்சைனையாக உள்ளது. டெல்லி, சூரத் மற்றும் மும்பைக்குப் பிறகு தெலுங்கானாவில் தொழிலாளர்கள் ஒன்று கூடி எங்களை சொந்த கிராமத்திற்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடியதால், ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக தூரங்கள் காற்றில் பறந்தன.
ஐ.ஐ.டி ஹைதராபாத்தின் கட்டுமான இடத்தில் பணிபுரியும் சுமார் 2400 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று காலை கூடியிருந்தனர் மற்றும் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்று சங்கரேட்டியின் கிராமப்புற போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அவர்களில் சிலர் காவல்துறையினர் மீது கற்களை எறிந்தனர். அதில் ஒரு காவல் அதிகாரி காயமடைந்தார். அதே நேரத்தில் போலீஸ் வாகனமும் சேதமடைந்தது.
Around 2,400 migrant labourers who were working at construction sites in IIT Hyderabad staged protest today morning, demanding they be sent back to their homes: Sangareddy Rural Police. #Telangana pic.twitter.com/xvhGaIcFb2
— ANI (@ANI) April 29, 2020
நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸை சமாளிக்க பிரதமர் நரேந்திர மோடி மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார் என்பதை அனைவருக்கும் தெரியும். ஆனால் இதற்கு மாறாக, ரயில்கள் இயக்கப்படும் என்று சமீபத்தில் மும்பையில் வதந்தி பரவியது. இதனால், பாந்த்ரா ரயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் அளவில் கூட்டம் கூடியிருந்தனர். பின்னர், காவல்துறை நடவடிக்கைக்கு பின்னர் கூட்டம் பின்வாங்கியது.
முன்னதாக டெல்லியில் இதே போன்ற நிலைமை ஏற்பட்டது. டெல்லி மற்றும் உ.பி.யின் எல்லைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூடியிருந்தனர். இதன் பின்னர், பேருந்துகளின் உதவியுடன் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். அண்மையில் குஜராத்தில் சூரத்தின் சாலைகளிலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டது.