பறவைகள் தங்கும் கூடு போல திருமண பத்திரிக்கை அடித்த குடும்பம்!

பறவைகள் தங்குவதற்கு ஏதுவான கூடு போல திருமண அழைப்பிதழை தயார் செய்து அசத்திய அப்பா-மகனின் யோசனை அனைவரையும் கவர்ந்துள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2021, 03:39 PM IST
பறவைகள் தங்கும் கூடு போல திருமண பத்திரிக்கை அடித்த குடும்பம்! title=

குஜராத் : ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத நாள் என்று ஒன்று இருக்கும், ஆனால் அனைவருக்கும் பொதுவாக மறக்க முடியாத நாளாக அமைவது அவர்களது திருமண நாள் தான்.  ஒவ்வொருவருக்கும் அவர்களது திருமணம் மற்றவர்களது திருமணத்திலிருந்து தனித்துவமானதாக தெரிய வேண்டும் என்று ஆசைபடுவர்.  அதற்கென்று பிரத்யேகமான ஏற்பாடுகளை செய்வது வழக்கம்.  அதற்கேற்றவாறு உடை, சிகை அலங்காரம், ஒப்பனை, உணவு, அழைப்பிதழ் என்று அனைத்திலும் தனித்துவம் காட்ட விரும்புவார்கள்.   இதுபோன்று தான் ஒரு குடும்பம் திருமண அழைப்பிதழில் புதுமையை புகுத்தியுள்ளது.   பொதுவாக திருமண அழைப்பிதழ்கள் எவ்வளவு ரூபாயில் அச்சிடப்பட்டு இருந்தாலும் திருமணத்திற்கு பின் குப்பையில் தான் போடப்படுகிறது.  அவ்வாறு அழைப்பிதழை வீணாக்காமல், அதனை பயன்படுத்தி கொள்ளும் வகையில் அளித்துள்ளனர்.

ALSO READ காதலியுடன் சுற்றுலா செல்ல ஆசைப்பட்டு இறுதியாக சிறைக்கு சென்ற காதலன் !

குஜராத்தில் உள்ள பாவ்நகர் என்கிற மாவட்டத்தை சேர்ந்தவர் சிவபாய் ராஜிபாய் கோஹில்.  இவரின் மகன் ஜெயேஷ் என்பவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.  மகனின் திருமணத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று சிவபாய் நினைத்தார்.  அதனையடுத்து வீணாக தெருவில் வீசப்படும் திருமண அழைப்பிதழை மக்கள் பயன்படுத்தும் வகையில் செய்தால் என்ன என்று யோசிக்கையில், பறவைகளின் கூடு போல செய்யலாம் என்ற யோசனை அவருக்கு வந்தது.

invitation

இதனை தொடர்ந்து தனது மகன் ஜெயேஷிடம், சிவபாய் இந்த யோசனையை கூறினார்.  அவர் மகனுக்கும் இது சிறந்த இடியாவாக தோன்றியதையடுத்து பறவைகள் தங்குவதற்கு ஏதுவான கூடு போல திருமண அழைப்பிதழை தயார் செய்து அவர்கள் வழங்கினர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "பொதுவாக எங்களுக்கு பறவைகள் என்றாலே பிடிக்கும் அவை தங்குவதற்கு ஏதுவாக எங்கள் வீட்டில் நாங்கள் இதுபோல கூடுகளை வைத்துள்ளோம் .  நாம் ஒருவருக்கு கொடுக்கும் பொருள் எப்போதும் பயன்தர வேண்டும், அதனாலேயே இதை செய்தோம்" என்று கூறினார்.

ALSO READ Cyclone Jawad: ஒடிசாவில் பள்ளிகள் மூடப்பட்டது; தயார் நிலையில் இந்திய கடற்படை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News