இந்திய போர் விமானங்களை இயக்கும் முதல் 3 பெண் விமானிகள்

Last Updated : Jun 18, 2016, 11:09 AM IST
இந்திய போர் விமானங்களை இயக்கும் முதல் 3 பெண் விமானிகள் title=

இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்கும் பணியில் 3 பெண் விமானிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 

கடந்த 1991-ம் ஆண்டு முதன் முதலாக இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதுவரை ஹெலிகாப்டர் மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே பெண் விமானிகள் இயக்கி வந்தனர். தற்போது இந்திய போர் விமானங்களை இயக்க அவானி சதுர்வேதி, மோகனா சிங் மற்றும் பாவ்னா கந்த் ஆகிய 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். பயிற்சி முடிந்து ஐதராபாத் அருகே உள்ள ஹகிம்பேட் விமானப்படை தளத்தில் இருந்து இவர்கள் விமானப்படையில் தங்களது சாதனை பயணத்தை துவங்கியுள்ளனர்.

போர் விமானங்களை இயக்கும் முதல் பெண் விமானிகள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முன்னிலையில் பொறுபேற்றுக் கொண்டனர். இவர்கள் ரஷ்யாவின் சுகோய், மிக் 21, 27 ரக போர் விமானங்களை இயக்கும் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

Trending News