புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மகத்தான திட்டத்தை அறிவித்த அரசு!!

வேலை வாய்ப்புக்கான மாபெரும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுக்கிறது. கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு சொந்த மண்ணில் வேலை... 

Last Updated : Jun 7, 2020, 08:35 PM IST
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மகத்தான திட்டத்தை அறிவித்த அரசு!! title=

வேலை வாய்ப்புக்கான மாபெரும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுக்கிறது. கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு சொந்த மண்ணில் வேலை... 

6 மாநிலங்களின் 116 மாவட்டங்களுக்குச்  சிறப்பு கவனம்... 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்புவது குறித்த பல காட்சிகள் அண்மைக்காலங்களில் அரசியலானது நாமறிந்ததே. ஆளும் கட்சி மீதான தீவிரமான அதிருப்தியைத் தூண்டுவதன் மூலம் அரசியல் ஆதாயம் காண எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தன.  ஆனால் இந்த தொழிலாளர்களின் நிரந்தர வேலைவாய்ப்புக்கு எதிர்க்கட்சியிடம் எந்தவொரு பயனுள்ள திட்டமும் இல்லை…

சொந்த ஊர் திரும்பிய பின்னர், இவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்பது தான் மிகப் பெரிய கேள்வியாக விஸ்வரூபமெடுத்தது.

சொந்த ஊரில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைப்பது சாத்தியமா?  

 புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சுற்றி  அரசியல் செய்யப்பட்டது.  அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்ட அரசாங்கம்,  அவர்களுக்காக ஒரு மெகா திட்டத்தை தயார் செய்துள்ளது. நாட்டின் 116 மாவட்டங்களை மையமாகக்கொண்டு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நிரந்தர திட்டத்தை உருவாக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதிக அளவில் தொழிலாளர்கள் திரும்பியுள்ள மாநிலங்களுக்குச் சிறப்பு கவனம் அளிக்கும் வகையிலான ஒரு திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது மோதி அரசு. தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரு மெகா திட்டம் இது.

READ | பீகார் சட்டமன்றத் தேர்தலில் NDA-க்கு 2/3 பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது: ஷா

மத்திய அரசு தேர்ந்தெடுத்த 116 மாவட்டங்களில்  பீகாரின் 32 மாவட்டங்களும், உத்தரப்பிரதேசத்தின் 31 மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தின் 24, ராஜஸ்தானில் 22, ஜார்க்கண்டில் 3, ஒடிசாவில் 4 மாவட்டங்கள் அடங்கும்.
 
இந்த சிறப்பு மெகா திட்டத்தின் கீழ், இந்த 6 மாநிலங்களில் ஊரகப் பகுதிகளுக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் புனர்வாழ்வு மற்றும் வேலைவாய்ப்புக்கு முழுமையான வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 116 மாவட்டங்களில், மத்திய அரசின் சமூக நலன் மற்றும் நேரடி நன்மை திட்டங்கள் துரித கதியில் செயல்படுத்தப்படும்.  சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு கொடுக்கப்படும்.  அவர்களின் திறன் மேம்பாடு மற்றும் நலத்திட்டங்களின் பயன்கல் அவர்களை சென்றடைவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

கொரோனாவின் தாக்கத்தால் பெருமளவில்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்தப்  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தான்.. அவர்களின் எண்ணிக்கை 8 கோடி என்று அதிகாரப்பூர்வமாக அறியப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் நாட்டின் பெருநகரங்களில் இருந்து பெரிய அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்கள் இடங்களுக்கு திரும்பிச் சென்றனர்.  இந்த இடப்பெயர்வினால், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

இது முதல் முறை அல்ல. பொது முடக்கத்துக்கு முன்பே தொழில் துறை முடங்கியபோது, இவர்களுக்கான  ஒரு திட்டத்தை மத்திய அரசு  முதலில் தயாரித்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் முதல் பொது முடக்கத்தின் போதே சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டது. புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றி சிந்தித்து எடுக்கப்ப்ட்ட சிறக்க திட்டங்களின்படி, இரண்டு மாதங்களுக்கு புலபெயர் தொழிலாளர்களுக்கு இலவச தானியம் கொடுக்கப்பட்டது.

READ | குறைந்தது மதுபான விலை... கூடுதல் கொரோனா வரியை திரும்ப பெற்றது அரசு!

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் பொருட்கள் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியம், 1 கிலோ பருப்பு கொடுக்கும் இந்தத் திட்டத்தால் எட்டு கோடி தொழிலாளர்கள் பயன் பெற்றனர். நாடு முழுவதற்கும் பொதுவான ரேஷன் அட்டை திட்டமும் அறிவிக்கப்பட்டது.

ஏழை மக்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கியது முதல் ஆதார் அட்டை பயன்பாடு வரை மோதி அரசின் தொலை நோக்குப் பார்வையும், தொழில்நுட்பப் பயன்பாடும் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த பெரிதும் உதவின. 

இந்த திட்டங்களால் நாட்டின் 116 மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு அதிகமாகுமா?

மன்ரேகா, ஸ்கில் இந்தியா, ஜன்-தன் திட்டம், கிசான் கல்யாண் திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம், பிரதமர் வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் வேகமாகப் பெருகும்.

இதனுடன், இந்த மாவட்டங்களை மையமாகக் கொண்டு, பிற மத்திய திட்டங்களுடன் சேர்ந்து, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சுயசார்புள்ள பாரதம் பிரச்சாரத்தின் கீழ் இன்னும் சில திட்டங்கள் அறிவிக்கப்படும்.  சுய சார்புடைய பாரதம் திட்டத்தின்  கீழ் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சிறு தொழில்களின் தேவைக்கேற்ப புலம்பெயர்ந்த இளம் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டமும் உள்ளது. இதனால் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப உள்ளூர் உற்பத்திக்கு தேவையான திறமையான தொழிலாளர் படையுடன், வாய்ப்புகளுக்கு  இந்தியா தயாராகலாம் ....

இப்போது இந்த திசையில் பணிகள் தொடங்கியுள்ளன. சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களின் வாழ்வு தடம் புரளாமல் காக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அனைத்து அமைச்சகங்களும் இந்த திட்டத்திற்கான வரைவைத் தயார் செய்ய முனைந்துள்ளன.

READ | வங்கி விவரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்; எச்சரிக்கும் SBI வங்கி...

இந்த மாவட்டங்களை மனதில் வைத்து இரண்டு வாரங்களுக்குள்,  திட்டங்களின் வரைவுகள்  தயாரிக்கப்பட்டு பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என  மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சுய சார்புள்ள பாரதத்தை உருவாக்குவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளார்.  

இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால், உத்தரப்பிரதேசம் போன்ற அதிக அளவு மக்கள்தொகை கொண்ட ஒரு மாநிலம் ஏற்கனவே அதன் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக பணிகளைத் தொடங்கியிருந்தது.

மக்கள் தொகையின் அடிப்படையில் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்திற்கு இதுவரை 30 லட்சம் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர்.

1400 சிறப்பு ஷ்ரமிக் ரயில்களில் மற்றும் பேருந்துகளில் அவர்கள் சொந்த மண்ணுக்கு திரும்பினார்கள். மாநிலத்தில் 57,000 சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையில் கடன் கொடுக்கப்படுள்ளது, அதுவும் அடமானம் இல்லாமல் என்பது குறிப்பிடத்தக்கது.  

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பேருந்துகள் என்ற விவகாரத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் அண்மையில் தலைப்புச் செய்திகளில் அடிபட்டது.  ஆனால் இதன் இந்த விவகாரத்தின் மையப்புள்ளியான லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு குறித்து யாரும் பேசவில்லை.  ஆனால், இது குறித்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் ஆரம்பத்தில் இருந்தே கவனம் செலுத்தியுள்ளார்.  

11 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியானது.   தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தத்தை மாநில அரசு செய்தது.  திறன் கண்டறிதல் மூலம் வேலை வாய்ப்பில் சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டது. FICCI மற்றும் IIA போன்ற அமைப்புகள் தொழிலாளர்களின் பட்டியலை அளித்தன. 

READ | JIO பயனாளர்களுக்கு நற்செய்தி... இனி 1 வருடத்திற்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் VIP இலவசம்!!

 சமீபத்தில், பல துறைகளுக்குமான பொருளாதார தொகுப்பை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் ஒரு கோடி தொழிலாளர்களை மனதில்கொண்டு ஒரே நேரத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது இதுவேமுதல்முறையாகும். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்திய பின்னர், இந்தத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களிலேயே சிறந்த வேலைவாய்ப்பைப் பெறமுடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.

 அரசின் இந்த முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறினால், எதிர்காலத்தில் கொரோனா போன்ற எந்தவொரு நெருக்கடியிலும், தொழிலாளர்கள் தப்பி ஓடும் தேவை ஏற்படாது. ஊரகப் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு, அவர்களின் சொந்த மண்ணிலேயே வேலைவாய்ப்பு கிடைத்தால், அவர்கள்  ஏன் பெருநகரங்களை  நோக்கி ஓட வேண்டும்?

- மொழிபெயர்ப்பு: நித்யா பாலாஜி. 

Trending News