தன்னை கிண்டல் செய்த மகனை பெற்ற தாயே எரித்துக்கொன்ற கொடூரம்!

கேரளாவில் எப்போதும் கிண்டல் செய்துகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த அம்மா, பெற்ற மகனை எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jan 19, 2018, 11:14 AM IST
தன்னை கிண்டல் செய்த மகனை பெற்ற தாயே எரித்துக்கொன்ற கொடூரம்!  title=

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் ஜெயாமோல். இவர் மகன் ஜித்து ஜாப். வயது 14. அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தான். இவர், அம்மாவிடம் கேலியாக பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் அம்மா, கோபத்தில் அடிக்கடி திட்டுவதும் அடிப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. 

இந்நிலையில் அந்த அம்மாவும் அவர் கணவரும் கடந்த திங்கட்கிழமை மாலை முதல் தன் மகனை காணவில்லை என்று கொல்லம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர். அப்போது ஜெயாமோல் கையில் தீக் காயம் இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வந்துள்ளனர். 

இதை தொடர்ந்து அவர் வீட்டுக்கு அருகில் உள்ள வாழைத்தோப்பில் ஜித்து ஜாப்பின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் அதைக் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது ஜெயமோல் தனது மகனைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

துணியால் மகனின் கழுத்தை நெறித்துக்கொன்ற அவர், வீட்டுக்கு அருகில் இருந்த சுற்றுச்சுவர் அருகே வைத்து எரித்துள்ளார். பின்னர் அதை கொஞ்சம் தூரமாக உள்ள வாழைத்தோப்புக்குத் தூக்கிச் சென்றுள்ளார். அருகில் உள்ள வீட்டில் இருந்து மண்ணெண்ணை வாங்கிவந்து ஊற்றி மீண்டும் எரித்துள்ளார். முழுவதுமாக எரிவது வரை அங்கேயே காத்திருந்துள்ளார் என்று கொல்லம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர் கணவரை போலீசார் விசாரணை செய்தபோது, அவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிவித்துள்ளார். 

பெற்ற தாயே தான் மகனை எரித்துக்கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Trending News