மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் கிடையாது என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஸ் சந்திரா கார்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் நாடு முழுவதும் பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார், அதன் பின்னர் புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது.
எனினும் மக்களிடையே பணம் பரிவர்தனைக்கான தட்டுபாடுகள் இன்னுமும் நிலவி வருகிறது. கிராமங்களில் மிக குறைந்த மதிப்பிலான பணம் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன, எனவே மக்கள் ரூ.2000 நோட்டுகள் கொண்டு தங்கள் தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளுதல் சற்று கடினமாகவே இருக்கிறது.
இதனை சரிசெய்யும் விதமாக புதிய ரூ.1000 நோட்டுகளை வெளியிட மதிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் இப்போது மீண்டும் அந்த தகவல்கள் பொய்யான தகவல் என வெளிட்டுள்ளது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.