இந்திய இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை -ராகுல்!

பாஜக ஆட்சியில் இந்திய இளைஞர்கள் வேலையில்லாமல் தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

Last Updated : Feb 23, 2019, 09:27 PM IST
இந்திய இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை -ராகுல்! title=

பாஜக ஆட்சியில் இந்திய இளைஞர்கள் வேலையில்லாமல் தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

டெல்லியில் மைதானத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது...

"நம் நாட்டின் வளம் அனைத்தும் ஒரு சில தனி நபர்களின் கைகளில் உள்ளது. தொழிலதிபர்களின் பெரும் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது, ஆனால் ஏழை விவசாயிகளின் கடன் கோரிக்கைகளை கூட ஏற்க மறுக்கிறது. தொழிலதிபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு உதவுகிறது, ஆனால் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதில்லை.

தொழிளதிபர்களின் கடனை தள்ளுபடி செய்யும் அரசு மாணவர்களின் கல்விக்கடனை ஏன் ரத்து செய்வதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பட்ஜெட்டில் கல்விக்கான நிதியை அதிகரிப்போம். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்குவோம் என தெரிவித்தார்.

இந்தியாவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உள்ளது.

இதற்கு தீர்வு காணப்படாததால் மக்கள் ஆளும் அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் வெறும் 450 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுகிறது. ஆனால், சீனாவில், அதே 24 மணி நேரத்தில் 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வருத்தத்தினை பகிர்ந்துக்கொண்டார்.

Trending News