காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!
வட இந்திய மாநிலங்களில் குளிர்காலம் துவங்கிய நாள் முதல் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகின்றது. காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். இந்த ஆண்டு, வருகிற 31-ஆம் தேதியுடன் கடும் பனிப்பொழிவு காலம் நிறைவுபெறுகிறது. எனினும் இதுவரை குளிரின் தாக்கம் குறைந்தபாடு இல்லை.
ஸ்ரீநகர், குல்கமார்க் மற்றும் பகல்காம் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கார்கில் பகுதியில் மைனஸ் 17°c , லடாக் மாகாணம் லே நகரில் மைனல் 12.4°c தட்பவெட்ப நிலை நிலவி வருகிறது.
அதேப்போல் உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் நிலவி வருகின்றது. இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தலைநகர் புதுடெல்லியில் ஏற்பட்ட புழுதி புயல் கூடிய காரணமாக, காற்று மாசு அதிகரித்துள்ளது. டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Delhi: Major pollutants PM 2.5 in 'Severe' and PM 10 in 'Very Poor' category in Lodhi Road area, according to the Air Quality Index (AQI) data. pic.twitter.com/xeqfF7Ed1B
— ANI (@ANI) January 3, 2019
பொதுவாக, காற்று மாசு உருவானால், அந்த காற்று மாசு அகன்றுபோவதற்கு, வெப்பத்துடன் கூடிய சீதோஷ்ண நிலை தேவைப்படும். ஆனால், தற்போது, குளிர்காலம் என்பதால், காற்றில் கலந்திருக்கும் மாசு கலைந்துபோகாமல், அப்படியே தேக்கமாகி வருகிறது.