சம்பர் ஏரியில் பத்து இனங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் இறப்பு

சம்பர் ஏரியில் கிட்டத்தட்ட 1000 உள்ளூர் மற்றும் புலம் பெயர்ந்த பறவைகள் (Migratory Birds) இறந்துள்ளன. இதன் காரணமாக உள்ளூர் நிர்வாகமும் பொது மக்களும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 12, 2019, 01:16 PM IST
சம்பர் ஏரியில் பத்து இனங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் இறப்பு title=

சம்பர் ஏரியில் கிட்டத்தட்ட 1000 உள்ளூர் மற்றும் புலம் பெயர்ந்த பறவைகள் (Migratory Birds) இறந்துள்ளன. இதன் காரணமாக உள்ளூர் நிர்வாகமும் பொது மக்களும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் (Rajasthan) தலைநகரான ஜெய்ப்பூர் (Jaipur) அருகே அமைந்துள்ள சம்பர் ஏரியில் (Sambhar Lake) ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த பறவைகள் இறப்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதுக்குறித்து எந்த தகவலையும் அரசு (Rajasthan Govt) தரப்பில் வெளியிடப்பட வில்லை. நமக்கு கிடைத்த தகவல்களின் படி, சம்பர் ஏரியில் கிட்டத்தட்ட 1000 உள்ளூர் மற்றும் புலம் பெயர்ந்த பறவைகள் (Migratory Birds) இறந்துள்ளன. இதன் காரணமாக உள்ளூர் நிர்வாகமும் பொது மக்களும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இந்த சம்பத்தை அடுத்து ஜெய்ப்பூருக்கு வந்த அரசு அதிகாரிகள், இறந்த பறவைகளின் உள்ளுறுப்பு விசாரணைக்கு (Test Reports) அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். விசாரணை அறிக்கை வந்த பின்னரே, பறவைகள் (Birds) இறப்பதற்கான காரணங்கள் தெரியவரும் எனக் கூறியுள்ளனர்.

விளையாட்டு செய்திகளை படிக்க...... கிளிக் செய்யவும்

செய்தி ஊடகம் ஏஎன்ஐ (ANI) நிறுவனம் அளித்த தகவலின் படி, ஏரியில் சுமார் 1000 உள்ளூர் மற்றும் புலம் பெயர்ந்த பறவைகள் இறந்துள்ளன. இதுக்குறித்து பேசிய, உதவி வனப் பாதுகாவலர் சஞ்சய் கவுசிக், "தண்ணீர் மாசுக் காரணமகா இறந்ததா? இல்லையா? அல்லது தண்ணீரில் ஏதாவது மாசு ஏற்பட்டு உள்ளதா? என்பதை சோதனை மூலம் , பரிசோதிப்போம். அதுமட்டுமில்லாமல், இந்த பறவைகளின் மரணம் ஏதோ வைரஸ் நோயால் ஏற்பட்டதா என்பதையும் அறிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் எனக் கூறிய அவர், வேட்டையாடுவதன் மூலம் பறவை இறந்திருக்கலாம் எனக் கூறுவது ஏற்புடைவதாக இல்லை எனவும் கூறினார். 

 

ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு உப்பு நீர் ஏரியான சம்பர் ஏரியைச் சுற்றி சுமார் பத்து இனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகள் இறந்து கிடந்த சம்பவம் உள்ளூர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்..? - EPS தாக்கு..!

வடக்கு ஷாலர், பிண்டெயில், கோனம் டீல், ரூடி ஷெல் டக், காமன் கோட் கெட்வால், ரஃப், பிளாக் ஹெட் கால், கிரீன் பீ ஈட்டர், பிளாக் ஷெல்லர் கைட் காஸ்பியன் கால், பிளாக் விங்கட் ஸ்டீல்ட், சாண்ட் பைப்பர், மார்ஷ் சாண்ட் பைப்பர், மணல் பைப்பர், வூட் செண்ட் பைப்பர் பைட் அப்சாய்ட், கென்டிஸ் ப்ளோவர், லிட்டில் ரிங்க்ஸ் ப்ளோவர், லெஸ்ஸர் சாண்ட் ப்ளோவர் போன்ற பறவைகள் உயிர் இழந்துள்ளன.

ZEE HINDUSTAN TAMIL நேரலை பார்க்க.... கிளிக் செய்யவும்

Trending News