திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்; தேவஸ்தானம் புது அப்டேட்

வரும் 15 முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2022, 06:45 AM IST
திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்; தேவஸ்தானம் புது அப்டேட் title=

Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.

தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான (Tirumala Tirupati Devasthanams) நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது. 

ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

அதன்படி கடந்த ஜனவரி மாதம், பிப்ரவரி மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. 15 ஆம் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் வருகிற 15 ஆம் தேதியில் இருந்து சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்குவது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 

திருமலையில் ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி அருகில் அஞ்சனாத்திரிமலையில் ஆஞ்சநேயர் கோவில் விரிவாக்கப் பணிகளுக்காக வருகிற 16 ஆம் தேதி பூமி பூஜை நடக்க உள்ளது. 

இதற்கிடையில் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28 ஆயிரத்து 410 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் 14 ஆயிரத்து 831 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 8 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன

Trending News