திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது. அதன்படி கடந்த ஜனவரி மாதம், பிப்ரவரி மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. அதே போல் திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் இலவச தரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு, டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.
மேலும் படிக்க | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
இந்த நிலையில் வருகிற 16 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் கூடுதலாக 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை திருமலையில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களின் மூலம் வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை, அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் தங்கும் விடுதி மற்றும் கோவிந்தராஜசுவாமி 2வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி கூறியதாவது., திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஒப்புதலின் பேரில் கூடுதலாக 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் கலந்து கொள்வது பற்றி, இம்மாதம் நடைபெற இருக்கும் தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR