இனி மாநில மொழிகளிலேயே ரயில் டிக்கெட் பெறலாம்!!

தென் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் ரெயில் டிக்கெட் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது...!

Last Updated : Apr 24, 2018, 07:35 PM IST
இனி மாநில மொழிகளிலேயே ரயில் டிக்கெட் பெறலாம்!! title=

தென் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் ரெயில் டிக்கெட் வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

ஒரு காலத்தில் புறநகர் ரயில் டிக்கெட்டாக இருந்தாலும் சரி, முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டாக இருந்தாலும் சரி தமிழில் அச்சாகி இருக்கும். இந்த வழக்கம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இந்தியில் மட்டும் கூட அச்சாகி வந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன் இந்தி - ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளில் அட்சிடபட்டது.

கர்நாடகாவில் இந்தி - ஆங்கிலத்தில் மட்டும் டிக்கெட் அச்சாகி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போராட்டம் பெரிதாகவே, டிக்கெட்டில் கன்னடத்திலும் அச்சிடப்படும் முறையை செயல்படுத்தினர். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தமிழில் ரயில் டிக்கெட் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.   

சோதனை முயற்சியாக இன்று முதல் சென்னை, நாகை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வழங்கப்படும் டிக்கெட்களில் தமிழ் சேர்க்கப்படுகிறது. மற்ற ரயில் நிலையங்களுக்கு விரைவில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி கூறும்போது..! தெற்கு ரயில்வேயின் தமிழக ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளில் இந்தி, ஆங்கில மொழிகளுடன் இனி தமிழ் மொழியும் இடம்பெறும். சென்னை, மதுரை, சேலம், திருச்சிஆகிய ரயில் நிலையங்களில் இன்று முதல் அந்தச் சேவை அமலுக்கு வந்தது. அதன் பிறகு, இவ்வார இறுதி முதல், அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். பல மாதங்களுக்கான தொடர் முயற்சியின் காரணமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது" என்றார்.

Trending News