முத்தலாக் என்ற விவாகரத்து முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினருக்கு வாய்ப்பு கொடுக்கும் படி 3 நாட்கள் வாதங்கள் நடந்து வருகிறது.
முத்தலாக் வழக்கில் பலதார மணம் குறித்து விசாரிக்கப்படாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்க பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் இன்று முதல் விசாரணை நடைபெற்றது.
முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் 7 மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இதில் முஸ்லிம் மத பெண் ஒருவர் தொடுத்துள்ள 5 ரிட் மனுக்களும் அடங்கும்.
இன்றைய வாதத்தில் மனுதாரர் தரப்பில் முத்தலாக் என்பது இஸ்லாமுக்கு எதிரானது. முத்தலாக் குறித்து குரானில் ஏதுமில்லை என்று எடுத்துரைக்கப்பட்டது.
முத்தலாக் என்பது எங்களின் தனிப்பட்ட சட்டம். அரசியலமைப்பு சட்டத்தின்படி தனிப்பட்ட சட்டம் என்பது அரசியலமைப்புக்குட்பட்டது. இதில் இதற்கு இடம் இருக்கிறது என்று முஸ்லிம் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான இந்த நடைமுறை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கிறது' என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
'முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் தலையிட, கோர்ட்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை' என, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வாதிட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கவுள்ளது.
நாடு முழுவதும், பல்வேறு கோர்ட்களில், தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர். தலாக் முறையால் பாதிக்கப்பட்ட, ஷாயிரா பானு என்பவர், 2016, பிப்ரவரியில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் பின்பே, இந்த பிரச்னை பெரிய அளவில் பேசப்பட்டது.