திரிபுராவில் அலுவலத்திற்கு வரும்போது அதிகாரிகள் ஜீன்ஸ் பேண்ட், T-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவை அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது...!
இதுவரையில் இந்தியாவில் பல பகுதிகளில் பள்ளிமாணவர்களுக்கு மட்டும் தான் ஆடை கட்டுபாடுகளை விதித்து வந்தனர். இதை தொடர்ந்து சமீபத்தில் கல்லூரி மாணவர்களுக்கு சில ஆடை கட்டுபாடுகளை விதித்தனர். தற்போது, திரிபுரா மாநில அரசு அதிகாரிகள் உடைக் கட்டுபாடுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசு அலுவலங்களில் பணி புரியும் அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேண்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மேலும், பல அரசு அதிகாரிகள் அலுவலக நேரத்திலும், ஆலோசனைக் கூட்டங்களிலும் மொபைல் போன்களை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.
எனவே, திரிபுராவில் அரசு அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கப்படுகிறது. மேலும் செல்போன்களையும் அணைத்து வைக்க வேண்டும். இல்லையேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.
Sushil Kumar, principal secretary to Tripura government for Education, Revenue & Information & cultural affairs, issued a memorandum on Aug 20 advising bureaucrats to avoid wearing jeans, cargo pants & denim shirts etc while attending official functions & meetings at all levels, pic.twitter.com/9pavOJdLhC
— ANI (@ANI) August 28, 2018