உஷார் நிலையில் இருக்க மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

அனைத்து மாநில அரசும, காவல்துறையினரும் உஷார் நிலையில் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 5, 2019, 03:26 PM IST
உஷார் நிலையில் இருக்க மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு title=

புது டெல்லி: மத்திய அரசின் இந்த முடிவுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் அனைத்து மாநில அரசும, காவல்துறையினரும் உஷார் நிலையில் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக மோடி அரசு வரலாற்று முடிவு ஒன்றை இன்று (திங்கள்கிழமை) எடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் ஜம்மு-காஷ்மீர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்து, சட்டசபை கூடிய தனி யூனியன் பிரதேசமாக இருக்கும். மற்றொன்று லடாக் சட்டசபை இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக இருக்கும் எனவும் அறிவித்தார். இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவரும் வழங்கியிருக்கிறார். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்கிற அந்தஸ்து இழந்துள்ளது. இனி மத்திய அரசு நினைத்தபடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைகளை மாற்ற முடியும். 

மத்திய அரசின் இந்த முடிவுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீர் எம்.பி-க்கள் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து ஏறிய முற்ப்பட்டதால், அவர்களை கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கூடிதலாக 35,000 பேர் பாதுகாப்பு பணிக்காக அனுப்பட்டு உள்ளனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க நேற்று நள்ளிரவு முதல் முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இணையதள சேவைகள், செல்போன் சேவைகள் முடக்கப்பட்டுவிட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கப்பட்டுள்ளதால், நாட்டில் எந்த பகுதியிலும் தாக்குதல் நடைபெறலாம் எனவும், அனைத்து மாநில அரசும, காவல்துறையினரும் உஷார் நிலையில் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக அனைத்து மாநில தலைமை செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவசர கடிதம் அனுப்பியுள்ளது.

Trending News