2020 ஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்: ராம்விலாஸ் பஸ்வான்

"2020ம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் "ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்" நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 3, 2019, 04:48 PM IST
2020 ஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்: ராம்விலாஸ் பஸ்வான் title=

புதுடில்லி: நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதில் தொடர்ந்து முயற்சி வந்தது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். இதுகுறித்து இன்று பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், "2020ம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் "ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்" நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

அவர் கூறியது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலிகளுக்கு நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், தகுதிவாய்ந்த பயனாளிகள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எந்தவொரு நியாயமான விலைக் கடையிலிருந்தும் (FPS), அதே ரேஷன் கார்டைப் பயன்படுத்தி மானிய விலையில் தங்களது உரிமையுள்ள உணவு தானியங்களைப் பெற அனுமதிக்கும்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும். அதன்பிறகு அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் (Electronic Point of Sale) அல்லது ஆதார் அடையாளம் (Aadhaar Authentication) அட்டை மூலம் கண்டறிந்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்படும் எனக் கூறினார்.

"இந்த முறை பெரும்பாலும் புலம்பெயர்ந்த பயனாளிகளான தொழிலாளர்கள், தினசரி கூலிகள், வேலை தேடி வேறு இடத்திற்கு செல்லுவோர்க்ளுக்கு பயனளிக்கும். அவர்கள் நாடு முழுவதும் உள்ள பிற காரணங்களுக்காகவோ தங்களின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பாஸ்வான் கூறினார்.

இத்திட்டத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கும், அதற்கான திட்டத்தை செயல்படுத்தவும் இந்தியத் தர நிர்ணய நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். அடுத்த ஆண்டு (2020) ஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

Trending News