புது தில்லி: துபாயில் இன்று WION உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் தெற்காசியாவின் பலம், வாய்ப்புகள் மற்றும் அதிகாரம் குறித்து ஆலோசனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய நிகழ்வில், உலகின் தலைசிறந்த அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் தலைவர்கள் தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்காலத்தைப் பற்றி தங்கள் கருத்துக்களை பேச உள்ளனர். தெற்காசிய நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பு தேவை என்ற ஆன்மீகவாதி சத்குரு தனது கருத்துக்களை பேச உள்ளார். பயங்கரவாதம், சமாதானம் மற்றும் முன்னேற்றம் பற்றிய விவாதத்தில், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ராம் சிங், அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானி மற்றும் மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்து வைக்க உள்ளனர்.
இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷேக் நஹயன் முபாரக் அல் நஹாயன் கலந்துக்கொள்கிறார். அவருடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்திய தூதர் நவ்தீப் சூரி கலந்துக்கொள்கிறார்.
ஆன்மீக குரு சத்குரு தெற்காசியா நாடுகளில் பொருளாதார ஒத்துழைப்பு தேவை பற்றி பேசுவார்.
முன்னாள் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் மற்றும் அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஹுசைன் இணைந்தது பயங்கரவாதம், சமாதானம் குறித்து பேச உள்ளனர்.
தற்போதைய உலகின் கிரிக்கெட் ஆதிக்கத்தை பற்றி முன்னால் இந்திய வீரர் வி.வி.எஸ். லக்ஸ்மன் பேசுவார்.
தெற்காசியாவுக்கு முன் என்ன வழி? வங்காள மந்திரி நாமல் ராஜபக்ஷ, முன்னாள் பங்களாதேஷ் மந்திரி மற்றும் ஆளும் அவாமி லீக் ஹசன்-உல்-ஹக் இனு மற்றும் தெற்காசிய நிபுணர் மைக்கேல் குகெல்மேன் ஆகியோர் இந்த பிரச்சினையில் விழிப்புணர்வு கொள்வார்கள்.
தெற்காசியாவுக்கு வளர்ச்சிக்கான பாதை என்ன? முன்னாள் பங்களாதேஷ் அமைச்சர் மற்றும் ஆளும் அவாமி லீக் ஹாசன்-உல்-ஹக் இன்யூ கட்சியின் உறுப்பினர் மற்றும் தெற்காசிய பொருளாதரா விவகார நிபுணர் மைக்கேல் குக்ல்மன் மற்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ஷ ஆகியோர் பேச உள்ளனர்.
இந்த மாநாடு நிகழ்ச்சி பிப்ரவரி 20 அன்று, 11.30 மணி முதல் WION செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.