ஓய்வு காலத்தில் கையில் ரூ.4 கோடி... SIP மூலம் மாதம் இவ்வளவு முதலீடு செய்யுங்க!

SIP Long Term Investment: ஓய்வு காலத்தில் உங்கள்  கையில் ரூ.4 கோடி வேண்டும் என்றால் நீங்கள் மாதம் SIP மூலம் எவ்வளவு தொகை, எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 11, 2024, 04:45 PM IST
  • SIP மூலம் மாதாமாதம் முதலீடு செய்வது நல்லது.
  • மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதில் மார்க்கெட் ரிஸ்க் உள்ளது.
  • மாத வருமானத்தில் இருந்து சிறு தொகையை முதலீடு செய்யலாம்.
ஓய்வு காலத்தில் கையில் ரூ.4 கோடி... SIP மூலம் மாதம் இவ்வளவு முதலீடு செய்யுங்க!

SIP Long Term Investment: முதலீடு செய்வது நிதி மேலாண்மையில் முக்கியமானதாகும். அதுவும் நீங்கள் இப்போதுதான் சம்பாதிக்க தொடங்குகிறீர்கள் என்றால் முதலீடு செய்யவும் இதுதான் சரியான நேரம். முதலீட்டில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயமே, அதன் பலன்களை பெற நீங்கள் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதுதான். குறைவான ரிஸ்க் என்பதால் நீண்ட காலம் காத்திருப்பதும் அதற்குரிய பலன்களை கைகளில் தரும் எனலாம். 

Add Zee News as a Preferred Source

மாதாமாதம் அல்லது காலாண்டுகளுக்கு ஒருமுறை போன்ற கால இடைவெளியில் SIP மூலம் முதலீடு செய்வது நல்லதாகும். SIP மூலம் ரூ.5000 முதல் ரூ.15 ஆயிரம் வரை முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் 4 கோடி  ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து இங்கு விரிவாக அறியலாம். 

SIP மூலம் முதலீடு

உங்களுக்கு மாதச்சம்பளம்தான் வருகிறது என நினைக்காதீர்கள். சிறுதுளிதான் நாளை பெருவெள்ளம் என்பதை மறக்காதீர்கள். மியூச்சுல் ஃபண்ட்களில் SIP மூலம் முதலீடு செய்து நீண்ட கால நோக்கில் வருவாய் ஈட்டலாம். நீண்ட காலத்தில் உங்கள் முதலீட்டை அதிகரிக்க கூட்டு வட்டி (Compound Interest) உதவும். நீண்ட காலம் காத்திருந்தால் பெரிய தொகையை அள்ளலாம். கூட்டு வட்டி என்றால் உங்கள் முதலீட்டுக்கு வரும் வட்டிக்கு தனி வட்டி எனலாம். இது ஒவ்வொரு காலகட்டத்திலும் உயர்ந்துகொண்ட செல்லும். 

மேலும் படிக்க |  இனி கல்விக்கடன் பெறுவது மிகவும் எளிது! இந்த ஆவணம் இருந்தால் மட்டும் போதும்!

SIP மூலம் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.100 வரை முதலீடு செய்யலாம். உங்களுக்கு ஏற்றவாறு முதலீடு செய்துகொள்ளுங்கள். முதலீட்டு தொகையையும் நன்கு நெகிழ்வான முறையில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், தவறாமல் ஒழுங்காக சேமித்து வையுங்கள். உங்களுக்கு ஏற்ற காலம் வரை முதலீடு செய்யுங்கள். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லது எனலாம்.

மாதம் ரூ.10 ஆயிரம்...

நீங்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை SIP மூலம் முதலீடு செய்கிறீர்கள் என்றால், ரூ.4 கோடி வருவாயை எட்ட நீங்கள் 32 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆம், 32 ஆண்டுகளாக நீங்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை முதலீடு செய்தால் ரூ.38 லட்சத்து 40 ஆயிரம் வரை முதலீடு செய்திருப்பீர்கள். அதன் மூலம் கிடைத்த வருவாய் ரூ.4 கோடியே 12 லட்சத்து 52 ஆயிரத்து 970 ஆக இருக்கும். ஒட்டுமொத்தமாக ரூ.4 கோடியே 50 லட்சத்து 92 ஆயிரத்து 970 ரூபாய் ஆகும். அதாவது நீங்கள் 28 வயதிலேயே முதலீடு செய்ய தொடங்கிவிட்டீர்கள் என்றால் 60 வயதில் உங்கள் கையில் ரூ.4 கோடி இருக்கும்.

மாதம் ரூ.15 ஆயிரம்... 

மாதம் ரூ.15 ஆயிரம் முதலீடு செய்தீர்கள் எனில் வெறும் 28 மாதங்களில் உங்கள் கையில் ரூ.4 கோடி இருக்கும். இந்த காலகட்டத்தில் மொத்தம் ரூ.50 லட்சத்து 40 ஆயிரம் முதலீடு செய்திருப்பீர்கள். அதன்மூலம் 3 கோடியே 63 லட்சத்து 38 ஆயிரத்து 771 ஆக இருக்கும். மொத்த தொகை 4 கோடியே 13 லட்சத்து 78 ஆயிரத்து 711 ஆக கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ளது கணிப்புகள் மட்டுமே, முதலீட்டுக்கான அறிவுரை கிடையாது என்பதை வாசகர்கள் நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும். இதனை பின்பற்றும் முன் நிதி ஆலோசகரை சந்தித்து தக்க ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜனவரிக்கு முன்பு 53% DA அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News