தனது தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்ற குல்தீப்!

உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுள்ள பாஜக-வில் இருந்து நீக்கப்பட்ட MLA குல்தீப் செங்கார் தனது தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

Last Updated : Jan 15, 2020, 07:52 PM IST
தனது தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்ற குல்தீப்! title=

உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுள்ள பாஜக-வில் இருந்து நீக்கப்பட்ட MLA குல்தீப் செங்கார் தனது தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ய முயற்சித்ததாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் கைது செய்யப்பட்டார். 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு உத்தர பிரதேசத்தின் உன்னாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. அதன்பின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கிய இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டது.
 
கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி 3 மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் குல்தீப் செங்காரை குற்றவாளி என தீர்ப்பு அளித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை அளித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தங்கள் மரண தண்டனையினை எதிர்த்து நீதிமன்றங்களை நாடி வரும் நிலையில், தற்போது இந்த வரிசையில் உன்னாவ் கற்பழிப்பு வழக்கு குற்றவாளியும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Trending News