கமலேஷ் திவாரி கொலை குறித்து விசாரணை நடத்தும் UP போலீஸ் SIT..

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவர்அலுவலகத்தில் படுகொலை..!

Last Updated : Oct 19, 2019, 10:25 AM IST
கமலேஷ் திவாரி கொலை குறித்து விசாரணை நடத்தும் UP போலீஸ் SIT.. title=

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவர்அலுவலகத்தில் படுகொலை..!

இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்டதை விசாரிக்க உத்தரபிரதேச அரசு வெள்ளிக்கிழமை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. லக்னோவில் உள்ள நாகா பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  

எஸ்.கே. பகத் (இன்ஸ்பெக்டர் ஜெனரல் லக்னோ), தினேஷ் பூரி (காவல்துறை குற்ற கண்காணிப்பாளர் லக்னோ) மற்றும் பி.கே.மிஸ்ரா (காவல்துறை சிறப்பு பணிக்குழு துணை கண்காணிப்பாளர்) ஆகியோர் இந்த வழக்கை விசாரிக்கும் SIT இந்த வழக்கில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதன்மை செயலாளர் (உள்துறை) மற்றும் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (DGP) ஆகியோரிடம் அறிக்கை கோரியுள்ளார்.

கமலேஷ் திவாரி என்பவரை சந்திக்க வந்த இருவர் அவரது கழுத்தை வெட்டியதாகவும் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த திவாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதல் மாடியில் இந்த கொலை சம்பவம் நடந்த போது கீழ்தளத்தில் திவாரியின் பாதுகாப்புக்காக இரண்டு போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொலையாளிகள் இருவரும் அவருக்கு தெரிந்தவர்கள் என்றும், திவாரியுடன் அவர்கள் தேநீர் அருந்தியதாகவும் தெரிவித்துள்ள போலீசார், கையில் வைத்திருந்த இனிப்பு பெட்டிக்குள் துப்பாக்கி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இந்த படுகொலை தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது. 

 

Trending News