ராம்பூர் நவாப்பின் ரூ.2,660 கோடி சொத்து விவகாரம் - 50 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வு

ராம்பூர் நவாப்பின் 2,664 கோடி ரூபாய் சொத்து விவகாரம், ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2023, 09:39 AM IST
  • ராம்பூரின் கடைசி நவாப் ராசா அலிகான் 1966-ல் இறப்பு
  • ரூ.2,664 கோடி சொத்துகளை பிரித்துக்கொள்வதில் வாரிசுகளிடையே மோதல்
  • 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது நீதிமன்றம்
ராம்பூர் நவாப்பின் ரூ.2,660 கோடி சொத்து விவகாரம் - 50 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வு title=

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூரின் (Rampur) நவாப்பாக 1949 ஆம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட ராசா அலிகான், 1966 ஆம் ஆண்டு காலமானார். அவருக்கு 3 மனைவிகள் உட்பட 6 பெண் குழந்தைகள், 3 மகன்கள் இருந்தனர். அவர் இறப்புக்குப் பிறகு சொத்துகளை பிரித்துக்கொள்வதில் வாரிசுகளிடையே விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்துக்கு சென்ற இந்த விவகாரம், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க | Link Pan + Aadhaar: உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா? தெரிந்துக் கொள்ள சுலப வழி

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய ராம்பூர் மாவட்ட நீதிமன்றம், ஷரியத் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு 16 வாரிசுகளுக்கு சொத்துக்கள் பிரித்து கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. 18 வாரிசுதாரர்கள் இருந்த நிலையில், 2 பேர் வழக்கு விசாரணையின்போது இறந்துவிட்டனர்.  2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, சொத்து பிரிப்பதற்கான ஆணையையும் ராம்பூர் மாவட்ட நீதிபதி உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளார். இந்த உத்தரவின்படி, மறைந்த முர்தாசா அலிகானின் மகள் நிகத், மகன் முராத் மியான் மற்றும் மறைந்த மிக்கி மியானின் மனைவியும் முன்னாள் எம்பியுமான பேகம் நூர்பானோ, அவரது மகன் நவேத் மியான் மற்றும் மற்றொரு தரப்பு மகள்கள் உட்பட 16 பேருக்கு சொத்து பிரித்து கொடுக்கப்பட உள்ளது. 

மேலும் படிக்க | Old Pension Scheme: மீண்டும் வருகிறது பழைய ஓய்வூதியத் திட்டம், ஊழியர்களுக்கு ஜாக்பாட்!!

2,664 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தில் ஷஹாபாத்தில் உள்ள கோத்தி காஸ்பாக், பெனாசிர் பாக், நவாப் ரயில் நிலையம், சர்காரி குந்தா மற்றும் லக்கி பாக் ஆகிய இடங்களும் அடங்கும். இதுதவிர, நகைகள் மற்றும் ஆயுதங்கள் போன்ற சில மதிப்புமிக்க பொருட்களும் வாரிசுதாரர்களுக்கு முறைப்படி பகிர்ந்து வழங்கப்பட உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கு, கடந்த புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News