டிரம்பின் வருகைக்கு முன்னதாக, அமெரிக்க ஹெலிகாப்டர் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல்

அடுத்த வாரம் டிரம்பின் இரண்டு நாள் இந்தியா பயணத்தின் போது அமெரிக்காவிலிருந்து 24 லாக்ஹீட் மார்டின் எம்.எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2020, 10:46 AM IST
டிரம்பின் வருகைக்கு முன்னதாக, அமெரிக்க ஹெலிகாப்டர் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் title=

புது டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) இந்தியா வருகைக்கு சில நாட்களுக்கு முன்னரே, அமெரிக்காவிலிருந்து 24 லாக்ஹீட் மார்டின் எம்.எச் -60 ரோமியோ ஹெலிகாப்டர்களை (24 Lockheed martin MH-60 Romeo Helicopters) வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சரவை குழு (சி.சி.எஸ் - Cabinet Committee on Security) ஒப்புதல் அளித்தது.

அடுத்த வாரம் டிரம்பின் இரண்டு நாள் இந்தியா பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியாவின் கடற்படை (Indian Navy) தாக்குதல் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடற்படைக்காக வாங்கப்படும் இந்த ஹெலிகாப்டர் ஒப்பந்த மதிப்பு சுமார் 4 2.4 பில்லியனாக இருக்கும். 

இந்தியா வருகைக்கு முன்னதாகவே அதிபர் டிரம்ப், இரு தரப்பினரும் இடையே "வர்த்தக ஒப்பந்தம்" (Trade Deal) விவகாரத்தில் அவசரம் காட்ட விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் கூறினார். அனால் "பின்னர் பெரிய ஒப்பந்தம ஏற்படுத்தப்படும்" என்றும் கூறியுள்ளார்.

இதுவும் படிக்க: டொனால்ட் டிரம்ப் ஒன்னும் கடவுள் அல்ல.... காங்கிரஸ் எம்.பி. ஆதிர் சவுத்ரி

நாங்கள் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய இருக்கிறோம். ஆனால் இது தேர்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தம் செய்யப்படுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்தியாவுடன் எங்களுக்கு மிகப் பெரிய ஒப்பந்தம் இருக்கும் என்று டிரம்ப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்க வர்த்தகம் ஆண்டுக்கு பத்து சதவீதத்திற்கும் மேலாக வளர்ந்து வருகிறது, மேலும் வர்த்தக பற்றாக்குறை குறைந்து வருகிறது.

டொனால்ட் டிரம்பின் முரட்டு பக்தன்... அவருக்கு சிலைவத்து பூஜை...

கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவின் ஆறாவது பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது. இப்போது இந்தியா அதன் நான்காவது பெரிய வாடிக்கையாளராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News