இந்தியில் ட்வீட் செய்த டிரம்ப்.. நாங்கள் வழியில் இருக்கிறோம், சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திப்போம்!

நாங்கள் வழியில் இருக்கிறோம், சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திப்போம்.. என இந்தியில் பதிவிட்டுள்ளர்

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 24, 2020, 10:44 AM IST
இந்தியில் ட்வீட் செய்த டிரம்ப்.. நாங்கள் வழியில் இருக்கிறோம், சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திப்போம்! title=

புது டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் மகள், மருமகளுடன் விரைவில் அகமதாபாத் வர உள்ளார். அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மோட்டேரா ஸ்டேடியம் வரை பிரதமர் மோடியுடன் 22 கி.மீ நீளமுள்ள ரோட்ஷோவில் டிரம்ப் கலந்துக்கொல்வார். பின்னர் அவர் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சியில் மோடியுடன் இணைந்து மக்கள் மத்தியில் உரையாற்றுவார். இதன் பின்னர் அவர் தாஜ்மஹால் பார்க்க ஆக்ரா செல்வார். டொனால்ட் டிரம்பின் சுற்றுப்பயணம் தொடர்பான ஒவ்வொரு புதுப்பிப்புக்கும் எங்களுடன் இருங்கள்...

இந்தியா வந்தடையும் முன்பே, இந்தியில் டொனால்ட் டிரம்பின் ட்வீட் செய்துள்ளார். அதில் "நாங்கள் இந்தியாவுக்கு வருவதை எதிர் நோக்கி உள்ளோம். நாங்கள் வழியில் இருக்கிறோம், சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திப்போம்! எனப் பதிவிட்டுள்ளர்.

 

டிரம்பைப் பார்த்ப்பதற்காக மக்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். ஏற்கனவே மக்கள் மைதானத்தின் உள்ள இருக்கைகளை சுற்றி வளைத்துள்ளனர்.

 

அகமதாபாத் விமான நிலையம் அருகே பள்ளி குழந்தைகள் குழு ஒன்று நிகழ்ச்சி நடத்துகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோரின் சாலை நிகழ்ச்சிகளின் போது இடம் பெரும் குழந்தைகளின் கலைநிகழ்ச்சி.

 

Trending News