கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில், இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, முழு வீச்சில், போடப்பட்டு வருகிறது. சுமார் 116 கோடி பேருக்கு இது வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரவிருக்கும் குளிர்காலத்தில் கோவிட் -19 (COVID-19) பராவல் மீண்டும் தொடங்குமோ என்ற அச்சம் நிலவும் நிலையில், பல மருத்துவ சங்கங்களை சேர்ந்த வல்லுநர்கள் மட்டுமல்லாது மாநிலங்களும், பூஸ்டர் டோஸ் (மூன்றாவது டோஸ்) வழங்க வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து நவம்பர் இறுதிக்குள் கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸை வழங்குவதற்கான கொள்கை திட்டத்தை தயாரிக்க வாய்ப்புள்ளது என்று பல ஊடக அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
ALSO READ | Farm Laws: மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது மத்திய அரசு
இது குறித்து விவாதிக்க, ஒரு முக்கிய கூட்டத்தை அடுத்த வாரம் திட்டமிடப்பட்டுள்ளது என்று நாட்டின் கோவிட் பணிக்குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். இருப்பினும், வயது வந்தோருக்கான தடுப்பூசி திட்டத்தை விரைவில் முடிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். கோவிட்-19 பூஸ்டர் டோஸ் குறித்து தயாரிக்கப்படும் கொள்கை திட்டம், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவால் (NTAGI), இறுதி செய்யப்படும். மேலும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து வயதுவந்தோருக்கும், முதல் டோஸ் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
கோவிட் பணிக்குழு உறுப்பினர் இது குறித்து கூறுகையில், “இந்திய தொற்றுநோயியல் மற்றும் நாட்டின் தொற்று நோய் நிலவரத்தின் அடிப்படையில் ஒரு விரிவான கொள்கை வெளிவர வாய்ப்புள்ளது, மற்ற நாடுகளின் அடிப்படையில் அல்லாமல், இந்தியாவில் உள்ள நிலையை கருத்தில் கொண்டு பூஸ்டர் தடுப்பூசி கொள்கை தயாரிக்கப்படும். அடுத்த இரண்டு வாரங்களில் கூட்டம் நடத்தப்பட வேண்டும்” என்றார். ஆலோசனைக் குழு, தகுதியுள்ள மக்களுக்கு பூஸ்டர் டோஸ் வழ்ங்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விவாதிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் அடுத்த கூட்டத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி (Corona Vaccine) போடுவதற்கான வழிகாட்டுதல்களை தயாரிப்பது குறித்தும் ஆலோசனை செய்யும்.
ALSO READ | ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு; வெளியானது பட்டியல்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR