புதுடெல்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இந்த முடிவை பிரதமர் மோடி, நேரலையில் அறிவித்தார். குருநானக் ஜெயந்தியை ஒட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இந்த மிகப் பெரிய முடிவை அறிவித்தார். ஓராண்டுக்கும் மேலாக போராடி வந்த விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறியது. மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, (PM MODI) விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தார். வேளாண் சட்டங்களை புரிந்துக் கொள்ளாததால் தான் பிரச்சனை, அதை அனைவருக்கும் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டியது முக்கியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Today I want to tell everyone that we have decided to repeal all three farm laws: PM Narendra Modi pic.twitter.com/ws353WdnVB
— ANI (@ANI) November 19, 2021
வேளாண் சட்டங்களை புரியாமல் எதிர்ப்பவர்களுக்கு அதை சரியாக எடுத்துச் செல்லவேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
READ ALSO | விவசாயிகளின் போராட்டத்தின் முதலாண்டு நிறைவு; நாடாளுமன்றத்திற்கு பேரணி
மத்திய அரசு, மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் (Farmers Protest) ஓராண்டை நெருங்கிய நிலையில், அவை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பலசுற்று பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனைத் தராத நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்றத்திற்கு பேரணியாக செல்ல விவசாயிகள் திட்டமிட்டிருந்த நிலையில், இன்று பிரதமர், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
Also Read | வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR