பாஜக ஆட்சி வீழ்வது உறுதி; பிரியங்கா காந்தி நம்பிக்கை...

பாஜக ஆட்சி வீழ்வது உறுதி என உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்!

Last Updated : May 12, 2019, 03:44 PM IST
பாஜக ஆட்சி வீழ்வது உறுதி; பிரியங்கா காந்தி நம்பிக்கை...

பாஜக ஆட்சி வீழ்வது உறுதி என உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்!

மக்களவை தேர்தலுக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைப்பெற்று வரும் நிலையில் இன்று பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் டெல்லி லோடி எஸ்டேட் பகுதியில் உள்ள சர்தார் பட்டேல் வித்யாலயாவில் வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடன் தெரிவித்ததாவது.,  மக்களின் ஆத்திரம் ஓட்டுகளாக மாறி விழுந்து கொண்டிருப்பதால் இந்த தேர்தலில் பாஜக அரசு வீழ்வது உறுதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் உண்மையான விவகாரங்களை பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு பிரதமர் மோடி தேவையில்லாத கதைகளை கூறி வருவதால் மத்தியில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த வேதனையும் ஆவேசமும் கொண்டுள்ளனர். 

தற்போது அவர்கள் தங்களது ஆத்திரத்தை ஓட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் பாஜக அரசு வீழ்வது உறுதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டு பேசினார்.

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று உத்திரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் 6-ஆம் கட்ட தேர்தல் நடைப்பெற்று வருகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மே 23-ஆம் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News