வட மாநிலங்களில் குளிர் காலத்தையொட்டி அங்கு கடும் பனி பொழியத் துவங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கடும் பனிப்பொழிவினால் சாலை, ரயில், விமானப் போக்குவரத்துகள் பாதிப்படைந்துள்ளன. வாகன ஓட்டிகளில் எதிரே வரும் வண்டிகள் தெரியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு மாதங்களாக பனிமூட்டம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தோடா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான பனிமழை காணப்படுகிறது. பனிப்பொழிவு அதிகம் காணப்பட்டத்தால்,அந்தப் பகுதி இரவு போன்று காட்சியளித்தது.
#WATCH Udhampur's Patnitop receives fresh snowfall #JammuAndKashmir pic.twitter.com/M2Gn1GHLLE
— ANI (@ANI) February 12, 2018
#JammuAndKashmir: Fresh Snowfall in Jammu's Doda district. pic.twitter.com/idHwwWilgX
— ANI (@ANI) February 12, 2018
கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை நாளுக்கு நாள் மிகவும் மோசமாடைந்து வருகிறது.
மின்சாரம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.