Indian Railways Viral Post: இந்திய ரயில்வே துறை (Indian Railways) என்பது மிகப்பெரிய ரயில் இணைப்பை வழிநடத்தும் ஒன்றாகும். லட்சக்கணக்கானோர் தினமும் ரயிலை தங்களின் அன்றாட பயன்பாட்டில் இருந்து நீண்ட தூர மற்றும் விரைவான பயணத்திற்காக பயன்படுத்துகின்றனர். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வகையிலான பயணிகளுக்கும் பல வகை ரயில்களை ரயில்வே துறை இயக்கி வருகிறது.
ரயில் நிலையத்தில் தொடங்கி ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகள் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ள கூடாது என பல சேவைகளை ரயில்வே வழங்கி வருகிறது. குறிப்பாக, ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை குறிப்பிட்டாக வேண்டும்.
கேப்டன் விஜயகாந்தும்... IRCTC தளமும்...
IRCTC இணையதளம் ஏறத்தாழ மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை போன்றது. IRCTC தளம்தான் நெட்டிசன்களால் அதிகம் கலாய்க்கப்படும் தளமாகும். இருப்பினும், அதனை பயன்படுத்தாமலும், அதனால் பயன் பெறாமலும் இருக்கவே முடியாது.
அந்த வகையில், ஒரு இளம்பெண் ஒருவருக்கு ரயில் பயணத்தில் நடந்த சம்பவம் தற்போது நெட்டிசன்களை மீண்டும் கொந்தளிக்க வைத்துள்ளது எனலாம். பாதிக்கப்பட்ட அந்த பயணியின் மூத்த சகோதரி இந்த சம்பவத்தை X தளத்தில் பதிவிட, ரயில்வே பாதுகாப்பு படையினர் வெறும் 20 நிமிடங்களிலேயே விரைந்து சென்று பாதிக்கப்பட்ட அந்த பெண் பயணிக்கு பிரச்னையை தீர்த்துவைத்த சம்பவம் நடந்துள்ளது.
வழக்கம்போல், ரயில்வே துறையின் பாதுகாப்பு காவலர்கள் இந்த பிரச்னையை விரைவாக தீர்த்தாலும், இதற்கு பின்னணியாக இருப்பதே ரயில்வே துறையின் மோசமான திட்டம்தான் என்றும் சிலர் கண்டித்துள்ளனர். இதுகுறித்து விரிவாக இதில் காண்போம்.
உத்தரகாண்டின் யோக் என் ரிஷிகேஷ் நகரில் இருந்து கொல்கத்தாவின் ஹவ்ரா நகர் வரை செல்லும் விரைவு ரயிலில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பயணி உத்தர பிரதேசத்தின் அயோத்தி கான்ட் இடத்தில் ரயில் ஏறியுள்ளார். தட்கலில் இந்த பயணி டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
நடந்தது என்ன?
நேற்று முன்தினம் மாலை 3.19 மணியளவில் @Avoid_potato என்ற X தள பயனர், முதல் பதிவினை பதிவிட்டார். அதில்,"எனது தங்கை ரயிலில் முதன்முறையாக தனியாக பயணிக்கிறாள். ஒருவழியாக, எங்களுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆனது. இருப்பினும் ரயில் மூன்று மணிநேரம் தாமதமாகவே வந்து சேர்ந்தது. ரயில் வந்தவுடன் அவளது சென்று பார்த்தபோது, அங்கு ஒருவர் தனது குடும்பத்துடன் அந்த சீட்டில் அமர்ந்திருக்கிறார்.
For the first time my younger sister is travelling alone by train.
Anyhow we got our ticket confirmed at the last moment and train arrived 3hrs late.
She went to her seat and it was not vacant, an uncle ji with her whole family was sitting there. pic.twitter.com/ECEbllMKXp— Potato (@Avoid_potato) February 18, 2024
"உடனே எனது தங்கை அவர்களிடம், தன் சீட்டில் இருந்து எழுந்திருக்கும்படி கூறியுள்ளார். ஆனால், அதற்கு அந்த நபர் சத்தம்போட்டு அதட்டியுள்ளார். அவர் இப்போது அவசரமாக செல்ல வேண்டியது இருந்ததால்தான் தனியாக பயணிக்கிறாள். தேர்வுக்காக அவள் செல்கிறாள்" என மற்றொரு பதிவில் குறிப்பட்டிருந்தார்.
பிரச்னை தீர்ந்தது எப்படி?
தொடர்ந்து மூன்றாவது பதிவில்,"இப்போது அவளுக்கு மிகவும் அசௌகரியமாக உள்ளது. அந்த நபர் எனது தங்கையை மேல் படுக்கையில் அமர வைத்துள்ளார். அதில், இன்னும் மூன்று பயணிகள் அவளுடன் அமர்ந்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், என்னால் இங்கிருந்து ஒன்றும் செய்ய முடியவில்லை. எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. நான் அவளுக்கு ஏதாவது செய்ய முடியுமா? இதற்கு ஏதும் சேவைகள் இருக்கிறதா?" என கேள்வியெழுப்பியிருந்தார்.
மேலும், இந்தியன் ரயில்வே பக்கத்தை குறிப்பிட்டு, PNR நம்பரையும் பதிவிட்டார். சிலர் Rail Madad செயலி மூலம் அதிகாரப்பூர்வமாக ரயில்வேக்கு புகார் அளிக்கும்படி பரிந்துரைத்தனர். Railway Seva என்ற பயணிகளின் குறையை தீர்க்கும் பக்கம், அந்த பதிவில் பயணியின் மொபைல் நம்பரை கோரியது. தொடர்ந்து, அந்த பாதிக்கப்பட்ட பயணி இருந்த இடத்தில் 20 நிமிடங்கள் ரயில்வே பாதுகாப்பு படையினர் சென்று அந்த பெண்ணிற்கு அவருக்கான இடத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர். இதனை அந்த சகோதரியே தனது பக்கத்தில் உறுதி செய்தார்.
I contacted railmadad(139) and RPF went there and gave her the seat,within 20 minutes.
Now she is with me,safely!!
Thanks #IndianRailways #railmadad@RailMinIndia https://t.co/wKkJ45bRzG— Potato (@Avoid_potato) February 18, 2024
நெட்டிசன்கள் கூறும் உண்மைகள்...
இந்த சம்பவத்தை தொடர்ந்து பலரும் இந்தியன் ரயில்வே மீது இணைய தாக்குதலை தொடுக்க தொடங்கினர். வருமானத்திற்காக பொது பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், 3AC பெட்டிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிப்பதுதான் இதுபோன்ற செயல்களுக்கு வித்திடுவதாக பதிவிட்டிருந்தார். மேலும், "இந்தியாவில் இது மிகவும் சாதாரணமானதாகிவிட்டது, யாரும் இதை பிரச்னையாகவே பார்க்காததால் இதனை தீர்க்கவும் முயற்சிக்க மறுக்கிறார்கள்" என ஒருவர் பதிவிட்டிருந்தார். மேலும் ஒருவர்,"வட இந்தியாவில் ரயிலில் செல்வது மிகவும் பயங்கரமானது" என்றும் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் பொருளாதாரத்தை விஞ்சிய ‘சில’ டாப் இந்திய நிறுவனங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ