காஷ்மீர் விவகாரம்; எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை -அமெரிக்கா!

காஷ்மீர் விவகாரத்தில் தங்களின் கொள்கையில் எந்த மாற்றம் இல்லை எனவும், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி காக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Last Updated : Aug 9, 2019, 03:28 PM IST
காஷ்மீர் விவகாரம்; எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை -அமெரிக்கா! title=

காஷ்மீர் விவகாரத்தில் தங்களின் கொள்கையில் எந்த மாற்றம் இல்லை எனவும், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி காக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஊடக சந்திப்பில் அமெரிக்க செய்தி தொடர்பாளர் மோர்கன் ஆர்டாகசிடம் காஷ்மீர் கொள்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை. அந்த பிரச்னைக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும். இந்த விவகாரத்தில் இரு நாடுகளை சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் அமைதி காக்க வேண்டும் என்பதே அமெரிக்கா விரும்புகிறது எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் இரு தெற்காசிய நாடுகளுடனும் அமெரிக்கா இணைந்து பணியாற்றும். இரு நாடுகளின் முக்கிய பிரச்னைகளை அமெரிக்கா உற்று கவனித்து வருகிறது. உலகின் எந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டாலும் சட்ட ஒழுங்கை காக்க வேண்டும், மனித உரிமைகளை மதிக்க வேண்டும், சர்வதேச விதிகளை மதிக்க வேண்டும், மக்கள் அமைதியை காக்க வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வகை செய்த அரசமைப்புச் சட்டம் 370 பிரிவை மத்திய அரசு திருத்த மசோதா மூலம் திரும்பப் பெற்றது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப்பிரித்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை மத்திய அரசின் கீழ் உள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது. 

இந்த மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு, குடியர தலைவரும் அறிவிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த அதிகாரப் போக்கிற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளது. 

Trending News