டெல்லியில் இரண்டு நாள் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் இன்று துவங்கிய கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதம் நடைபெறுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது. கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக தற்போது 5 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. தொடர்ந்து வருகிற 2019 ஆம் ஆண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் பா.ஜ.க திட்டம் வகுத்து வருகிறது.
இதற்கிடையே, தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு என பல பிரச்னைகளினால் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. எனவே இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதத்தில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்ற நிலையில் பா.ஜ.க அரசு உள்ளது.
"We will come with an absolute majority. Sankalp ki shakti ko koi parajit nahi kar sakta", says BJP President Amit Shah at BJP office bearers meeting (Sources) (file pic) #Delhi pic.twitter.com/9Ouz71BnR5
— ANI (@ANI) September 8, 2018
இந்நிலையில், டெல்லியில் நாளையும் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதில், நாடாளுமன்றத் தேர்தல், இந்தாண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சற்றுமுன் கூட்டமானது துவங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச அரங்கில், பா.ஜ.க தேசிய தலைவர், அமித் ஷா தலைமையில், செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இதனிடையில், பா.ஜ.க தேசிய தலைவர், அமித் ஷா பேசுகையில், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேத்தலில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என தெரிவித்துள்ளது...!
#Visuals BJP President Amit Shah at BJP office bearers meeting at Delhi's Ambedkar International Centre. pic.twitter.com/IM30gIodPW
— ANI (@ANI) September 8, 2018