மகளின் திருமாணத்தின் போது மணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்!!
திருமணம் நெருங்கி வரும் வேலையில் மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் மாயமானதால் இளம்ஜோடியின் திருமணம் பாதியிலேயே நின்று போனது. குஜராத் மாநிலம் சூரத் கட்டர்கம் பகுதியில் தான் இந்த விநோதம் நிகழ்ந்துள்ளது. ஜவுளி தொழிலதிபர் ஒருவரின் மகனுக்கும், நவ்ஸ்ரி பகுதியைச் சேர்ந்த வைர கைவினைஞர் ஒருவரின் மகளுக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறுவதாக இருந்துள்ளது. இதனிடையே இரு வீட்டாரும் அடிக்கடி பேசி நெருக்கமாகியுள்ளனர். மணமக்களும் திருமணத்திற்கு தயாராகினர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல் மணமகனின் தந்தையும் (ஜவுளி தொழிலதிபர்), மணகளின் தாயும் திடீரென மாயமாகியுள்ளனர். இரு தரப்பினரும் புகார் அளித்த நிலையில் அவர்கள் ஒன்றாக ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இதனால் இரு குடும்பத்தாரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் இளம் ஜோடிகளின் திருமணம் பாதியிலேயே நின்றுள்ளது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்திற்கு தேவையா ஏற்பாடுகளை செய்யும் போது ஒருவருக்கொருவர் பேசி முடிவெடுத்தனர். இவ்வாறு அடிக்கடி பேசியப் போது இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்டு இந்த அளவுக்கு சென்றது தெரிய வந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள ஜோடிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.