மேற்கு வங்காளம், அசாமில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!!

மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான கவுண்டன் தொடங்கியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 1, 2021, 08:59 AM IST
மேற்கு வங்காளம், அசாமில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!! title=

தெற்கு 24 பர்கானா, பாங்குரா, பாசிம் மெடினிபூர் மற்றும் பூர்பா மெடினிபூர் மாவட்டங்களில் இருந்து மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில், நந்திகிராமின் மதிப்புமிக்க இடமும் மாற்றும் முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி (Mamatha Banerjee) தொகுதியும் அடங்கும். களத்தில் உள்ள 171 வேட்பாளர்களில் 92 பேர் பெண்கள். 

மறுபுறம், அசாமில் (Assam), 27 தொகுதிகள் இன்று வாக்களிக்கப் போகின்றன, 1.5 முதல் 2 லட்சம் வரை வாக்காளர்களைக் கொண்டுள்ளன. அசாமிலும் இன்று  2- ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 26 பெண்கள் உள்பட 345 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் (Assembly Electionநடைபெறும் தொகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ALSO READ: RSS-ன் இந்து மதத்தை நம்ப மாட்டோம் BJP-க்கு எதிராக யுத்தம் செய்வோம்: மம்தா பானர்ஜி

காலை 7 மணிக்கு மேற்கு வங்காளம் (West Bengal), அசாமில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் நேற்று இரவே வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களும் வந்து சேர்ந்தன. கொரோனா விதிமுறைகளின்படி வாக்காளர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். 

 

 

 

 

பாஜக அசாம் கணபரிசத் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, அசாம் ஜாதிய பரிசத் என மும்முனை போட்டி நிலவுகிறது. 73 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்காக 10 ஆயிரத்து 592 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 310 கம்பெனி மத்திய போலீஸ் படை குவிக்கப்பட்டு இருக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவெளியின்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 

 

 

 

 

ALSO READ | மேற்குவங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மம்தா பேனர்ஜியின் ஆடியோ

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News