WB தேர்தல் 2021: மேற்கு வங்கத்தில் கொடி நாட்ட பாஜகவின் 'மாஸ்டர் பிளான்' என்ன?

மேற்கு வங்கத்தில் கொடி நாட்ட பாஜகவின்'மாஸ்டர் பிளான்' என்ன? தேர்தல் வியூகம் வகுப்பதில் சாணக்கியர் என்று அறியப்படும் அமித் ஷாவின் வியூகம் சாதிக்குமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 23, 2020, 03:45 PM IST
  • 2021ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது
  • பாஜக மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைக்க வியூகம் அமைத்து வருகிறது
  • உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேற்கு வங்காள மாநில விஜயத்தின் வியூகம் என்ன?
WB தேர்தல் 2021: மேற்கு வங்கத்தில் கொடி நாட்ட பாஜகவின் 'மாஸ்டர் பிளான்' என்ன? title=

புதுடெல்லி: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக மேற்கு வங்காளத்திலும் சட்டமன்ற தேர்தல்கள் (West Bengal Assembly Election 2021)  நடைபெறவிருக்கிறது. தேர்தல்களில் வெற்றி பெற வியூகங்களை அமைப்பதில் சாணக்கியர் என்று அறியப்படும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மதியூகி அமித்ஷா (Amit Shah) மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேற்கு வங்காளத்திற்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), அந்த மண்ணின் மைந்தர்களுக்கு மரியாதை செய்தார். மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்த பெரிய மனிதர்களுக்கு வணக்கம் தெரிவித்து, தன்னுடைய தேர்தல் மூலோபாயம் என்ன என்பதை அவர் சுட்டிக் காட்டிவிட்டதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது அமித் ஷா வகுக்கும், இதுவே மேற்கு வங்காளத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான (West Bengal Assembly Election 2021) பாஜகவின் மூலோபாயம் என்று தெரிகிறது. அதாவது,  திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தில் வங்காளத்தின் பெரிய மனிதர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதை நிரூபிக்க பாஜக முயற்சிக்கும்.

மேற்கு வங்கத்தில் வெற்றியைப் பெற பாஜகவின் (BJP)மூலோபாயம் என்ன என்பது இப்போது படிப்படியாக தெளிவாகி வருகிறது. மேற்கு வங்கத்தின் பெரிய மனிதர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து எப்போதும் குரல் கொடுக்கும் பாஜக, தற்போது அந்த மண்ணின் மைந்தர்களாய் தலைசிறந்து விளங்கியவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் தன்னை வங்காள அடையாளத்துடன் இணைத்துக் கொள்கிறது, இது சட்டசபை தேர்தலில் பயனடைவதற்கான பாஜகவின் சிறந்த உத்தியாக இருக்கும்.  

Also Read | தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியை பார்த்து எல்லாரும் பயப்படனும்: சீமான்

இந்த சூழலில் நாளை, டிசம்பர் 24 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) சாந்திநிகேதனில் (Shantiniketan)  உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் (Visva Bharati University) நூற்றாண்டு கொண்டாட்டங்களில் ( Centenary Celebrations) கலந்துக் கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுவார். அதற்கு முன்னதாக, வங்காள மண்ணில் வெற்றி சரித்திரத்தை எழுத பாஜக (BJP) களத்தில் இறங்கிவிட்டது.

வங்காளிகள் மற்றும் வெளி மாநிலத்தவர் இடையிலான ஆகியவற்றின் வேறுபாடு
2011இல் ஆட்சிக்கு வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) மம்தா பானர்ஜி (Mamata Banerjee), மாநிலத்தின் மண்ணின் மைந்தர்கள் மற்றும் வேற்று மாநிலத்தவர் இடையே வேறுபாட்டைக் காட்டினார், ஆனால், வங்காள அடையாளங்களை புறக்கணித்தார் என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. முதல்முறையாக ஒரு அரசியல் கட்சி தங்களுக்கு மரியாதை தந்திருப்பதாக சுதந்திர போராட்ட வீரர் குதிராம் போஸின் (Khudiram Bose) குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமித் ஷாவின் வருகையின் போது அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது கவனிக்கத்தக்கது.  

டிசம்பர் 19 மற்றும் 20 என இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்திற்கு வந்த அமித் ஷா, சாந்திநிகேதனுக்குச் செல்வதற்கு முன்பு சுவாமி விவேகானந்தருக்கு (Swami Vivekananda) மரியாதை செலுத்துவதற்காக ராமகிருஷ்ணா மிஷனுக்கும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் சுவாமி விவேகானந்தரின் எண்ணங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் ஆக்கப்பூர்வமான இணைப்பு  அனைவருக்கும் தெரிந்ததே.

இதன் பின்னர், அமித் ஷா, சுதந்திர போராட்ட தியாகி குதிராம் போஸின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்தார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் (J.P.Nadda) ராமகிருஷ்ணா மிஷனுக்கு விஜயம் செய்துள்ளார் என்பதையும் இணைத்துப் பார்த்தால் பாஜகவின் தேர்தல் வியூகம் தெளிவாகத் தெரிகிறது.

Also Read | New coronavirus strain: ஜனவரி 2 வரை கர்நாடகாவில் இரவு ஊரடங்கு உத்தரவு!

மேற்கு வங்காளத்திற்கு வந்த அமித் ஷா, பல  கோயில்களுக்கும், மாநிலத்தை சேர்ந்த முக்கியத் தலைவர்களின் நினைவிடங்களுக்கும் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாஜகவின் தன்மை, மேற்கு வங்காளத்தின் தன்மையிலிருந்து வேறுபட்டதல்ல என்பதைக் காட்ட அவர் முயற்சிக்கிறார். மென்மையான இந்துத்துவாவுடன், வங்காள வாக்காளர்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளின் வெளிப்பாடாகவே அமித் ஷாவின் இந்த பயணம் பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இந்து வாக்காளர் மீது பாஜக கவனம் செலுத்துகிறது. இந்துக்களின் வாக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்தால், அது ஆட்சிக் கட்டிலுக்கு செல்வதற்கான பாதையை விசாலமாக்க்கும் என்று பாஜக கருதுகிறது. 

Also Read | Xiaomi போன் வாங்கினால் தான் திருமணம் என ட்வீட் செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News