Mi 10T Pro வாங்கினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என ட்விட் செய்த நபருக்கு அந்நிறுவனம் அவர் விரும்பிய செல்போனை பரிசாக வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது..!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஸியோமி நிறுவனத்தின் செல்போன் வாங்கினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என ட்விட் செய்த நபருக்கு அந்நிறுவனம் அவர் விரும்பிய செல்போனை பரிசாக வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரபல செல்போன் நிறுவனமான ஸியோமி (Xiaomi) நிறுவனம் தங்களது புதிய செல்போனாக Mi 10T Pro என்ற செல்போனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் Mi செல்போனின் ரசிகரான கமல் அகமது என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விளையாட்டாகத் தான் Mi 10T Pro செல்போனை வாங்கும் வரை திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என ட்விட் செய்திருந்தார்.
haha! I think you are now ready to get married
On a serious note, #Mi10TPro is probably the best flagship phone in India right now. I hope you like it. Please do try out the #108MP camera and share your feedback with us.I #Mi #Mi10 #Mi10T https://t.co/fsrOsQfVZP pic.twitter.com/mKVvZw9SH6
— Manu Kumar Jain (@manukumarjain) December 21, 2020
ALSO READ | இன்று முதல் Amazon விற்பனையில் Redmi 9 Power பட்ஜெட் ஸ்மார்ட்போன்! விலை மற்றும் அம்சங்கள் அறிக
இந்த ட்விட் அப்பொழுது பெரிதாகப் பிரபலமாகவில்லை ஆனால் இது எப்படியோ ஸியோமி நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின் கண்ணில் பட்டுவிட்டது போல, அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ட்விட் செய்த இளைஞரின் முகவரியைக் கண்டறிந்து அந்த இளைஞருக்கு ஒரு Mi 10T Pro மொபைலை பரிசாக வழங்கியுள்ளார். கமல் அகமது ட்விட் செய்த 10 நாட்களில் அவருக்கு அந்த போன் கிடைத்தது.
அந்த போன் கிடைத்ததும் அதைப் புகைப்படம் எடுத்து டிவிட்டர் வெளியிட்ட கமல் அகமது இதற்கு நன்றி தெரிவித்து மனுகுமார் ஜெயினையும், ஸியோமி இந்தியா நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார். இதற்குப் பதிலளித்த மனுகுமார் ஜெயின். இப்பொழுது நீங்கள் திருமணத்திற்குத் தயார் என நினைக்கிறேன். Mi 10T Pro மொபைலை பயன்படுத்திப் பாருங்கள். அதன் 108 எம்பி கேமராவை பயன்படுத்தி விட்டு அது குறித்த உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என ட்விட் செய்திருந்தார். நகைச்சுவையாக வெளியிட்ட ட்விட்டிற்காக ஸியோமி நிறுவனம் தனது தயாரிப்புகளின் ரசிகர் ஒருவருக்கு சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பரிசாக வழங்கியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR