மணப்பெண்ணாக மாறிய ஆண் - விபரீதத்தில் முடிந்த பேஸ்புக் காதல்

மணப்பெண் வேடத்தில் இருந்த ஆணை பார்த்து மணமகனும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 28, 2022, 02:17 PM IST
  • விபரீதத்தில் முடிந்த பேஸ்புக் காதல்
  • மணப்பெண் வேடத்தில் ஆண்
மணப்பெண்ணாக மாறிய ஆண் - விபரீதத்தில் முடிந்த பேஸ்புக் காதல் title=

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மனிதர்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. காலை எழுவதிலிருந்து இரவு உறங்குவரை அனைவரும் பேஸ்புக்குடனே இருக்கின்றனர்.

இந்த பேஸ்புக்கில் பல காதல்கள் அரங்கேறுவதும் வாடிக்கை. அதில் சில காதல்கள் திருமணம்வரை செல்ல சில காதல்கள் விபரீதத்தில் முடிகின்றன. மேலும் பெண் பெயரில் ஐடி ஓப்பன் செய்து பலரை ஏமாற்றும் சதி வேலைகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

Facebook

அந்தவகையில் பீகார் மாநிலத்தில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் பர்கானாஸ் பகுதியை சேர்ந்தவர் அலோக் குமார். இவருக்கு ஒடிசாவைச் சேர்ந்த மேக்னா மண்டல் என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக உருமாற மேக்னாவை திருமணம் செய்ய அலோக் குமார் முடிவு செய்து வீட்டு சம்மதத்தையும் பெற்றுவிட்டார்.

இதனையடுத்து அலோக்குக்கும், மேக்னாவுக்கும் திருமண ஏற்பாடுகள் ஆரம்பித்துள்ளான். அதன்படி கடந்த 24ஆம் அதேதி மேக்னாவை, காசியாவில் இருக்கும் தன் தாய்மாமா வீட்டுக்கு அலோக் அழைத்து சென்று அவரை திருமணமும் செய்துகொண்டார்.

Marriage

திருமணத்திற்கு அடுத்ததாக வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் சுஜாதா மண்டல் என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் மேக்னாவை அடையாளம் கண்டுகொண்டு மேக்னாவை மேக்னாட் என அழைத்துள்ளார்.

இதனால் குழப்பமடைந்த மணமகனும், அவரது உறவினரும் சுஜாதா மண்டலிடம் விசாரித்துள்ளனர். அப்போது மேக்னா பெண் இல்லை ஒரு ஆண் என்பதை கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் மேக்னாவிடம் (மேக்னாட்) இதுகுறித்து கேட்டபோது, அவர் பெண் இல்லை ஆண் என்பதும் இதுபோல் பல ஆண்களை பெண் வேடமிட்டு அவர் ஏமாற்றியதும் தெரியவந்தது.

மேலும் படிக்க | கர்நாடக மாநிலத்தில் காட்டு யானையை சுட்டு கொன்றவர் கைது

உடனே ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் மேக்னாட்டின் முடியை வெட்டி ஆண்களுக்கான ஆடைகளை அணிய செய்து கடுமையாக தாக்கினர். இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மேக்னாட்டை காவல் நிலையத்திற்கு மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர்.

மேலும் படிக்க | ரூ.2000 நோட்டுக்கள் புழக்கம் வெகுவாக குறைந்தது ஏன்... RBI கூறிய முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News