இன்று முதல் மாற இருக்கும் முக்கிய விதிகள் என்னென்ன: இதோ முழு விவரம்

இந்த முக்கியமான விதிகள் இன்று (ஜூலை 1) முதல் மாற உள்ளது, இது உங்களை நேரடியாக பாதிக்கும்..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2021, 07:00 AM IST
இன்று முதல் மாற இருக்கும் முக்கிய விதிகள் என்னென்ன: இதோ முழு விவரம் title=

இந்த முக்கியமான விதிகள் இன்று (ஜூலை 1) முதல் மாற உள்ளது, இது உங்களை நேரடியாக பாதிக்கும்..!

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. இவை உங்கள் பாக்கெட்டிலும் வாழ்க்கையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால், தான் இதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பது முக்கியம். LPG சிலிண்டர்களில் (LPG Gas cylinder) இருந்து SBI வரை உள்ள விதி ஜூலை 1 முதல் மாறப்போகிறது.

1. எஸ்பிஐ ஏடிஎம் கட்டணங்கள்
எஸ்பிஐ (State Bank of India) இன் BSBD வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் தனது அடிப்படை சேமிப்பு கணக்கில் 4 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம், இன்று 4 முறைக்கு மேல் ATM அல்லது வங்கி கிளை மூலமாகவோ பண பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும். 

2. எஸ்பிஐ செக்புக் கட்டணம்
எஸ்பிஐ BSBD வாடிக்கையாளர், ஒரு ஆண்டில் 10 காசோலை தாள்களை இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட காசோலைகளை பயன்படுத்த வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 10 காசோலைகள் புத்தகத்திற்கு 40 ரூபாய் கட்டணம் + GST. 25 காசோலைகள் புத்தகத்திற்கு 75 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

ALSO READ | இனி வங்கிக்கு போக வேண்டாம், இதை மட்டும் செஞ்சாலே போதும்!

3. சிண்டிகேட் வங்கி IFSC இயங்காது
கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் சிண்டிகேட் வங்கியின் IFSC Code இயங்காது. அதனால் பழைய ஐஎஃப்எஸ்சி கோடுகளை பயன்படுத்தி, இன்று முதல் வங்கிகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது என அறிவித்துள்ளது.

4. டிடிஎஸ் பிடித்தம்
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு, அரசு இன்று முதல் டிடிஎஸ் பிடித்தம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. மேலும் 50,000 ரூபாய் அல்லது அதற்கும் மேல் டிடிஎஸ் செலுத்துவோரை கண்டறிந்து அவர்களை வரி வரம்புக்குள் கொண்டு வரவும் இது உதவும் என வருமான வரித்துறை கூறியுள்ளது.

5. எல்பிஜி சிலிண்டர் விலை
ஜூலை 1 முதல் எல்பிஜி சிலிண்டரின் விலை திருத்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் மாதத்தில் விலையை அதிகரிக்கவில்லை. ஆனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் விதத்தில், எல்பிஜி சிலிண்டர்களின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது, ​​டெல்லியில் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .809 ஆகும்.

6. ஓட்டுநர் உரிமத்தில் வருகிறது புதிய அமல்
ஓட்டுநர் உரிமம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க தேவையில்லை என்கிற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க தேவையில்லை. இந்த புதிய நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருக்கிறது.

7. Maruti கார்கள் விலை உயர்வு
கார் (Cars) தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் கார்களின் விலையை உயர்த்தி உள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

8. ஹீரோ மோட்டோகார்ப் விலை அதிகரிப்பு
ஹீரோ மோட்டோகார்ப் அதன் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை இன்று முதல்  3,000 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளது. இது மூலதன பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பினை செய்யப்பட்டுள்ளது.

9. ஆந்திரா வங்கி & கார்ப்பரேஷன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு
பொதுத்துறை வங்கிகளின் இணைப்புக்கு பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் இணைக்கப்பட்டன. இந்த நிலையில் மேற்கண்ட இரு வங்கி வாடிக்கையாளர்களும் புதிய செக் புக்கினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

10. வருமான வரித்துறையினரின் புதிய வசதி
எளிதில் இணையத்தில் கண்டறியும் விதமாக புதிய வசதி இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது டிடிஎஸ் பிடித்தம் செய்வோருக்கும், டிசிஎஸ் வசூலிப்பவருக்கும் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

ALSO READ | SBI Big update: வீட்டில் இருந்தபடியே இனி இதையும் ஆன்லைனில் செய்யலாம், அசத்தும் SBI!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News