மகாராஷ்டிரா தேர்தல் 2024: இந்த முறை யாருக்கு அரியணை? முழு அட்டவணை விவரம்

Maharashtra Elections 2024 Full Schedule: மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில்மகா விகாஸ் அகாடி கூட்டணி மற்றும் மகாயுதி கூட்டணி இடியாயே கடும் போட்டி நிலவுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 12, 2024, 04:36 PM IST
மகாராஷ்டிரா தேர்தல் 2024: இந்த முறை யாருக்கு அரியணை? முழு அட்டவணை விவரம் title=

Maharashtra Assembly Election Latest News: மகாராஷ்டிரா மாநிலத்தில் இம்மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அக்டோபர் 15, 2024 அன்று அறிவித்தது.

மகாராஷ்டிரா சட்டசபை தொகுதிகள் விவரம்

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் நவம்பர் 26 அன்று முடிவடைகிறது. மகாராஷ்டிரா சட்டப் பேரவையின் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 288 சட்டமன்றத் தொகுதிகளில், 234 பொதுப் பிரிவின் கீழ் வருகின்றன, 29 பட்டியல் சாதியினருக்கு (SC) மற்றும் 25 பட்டியல் பழங்குடியினருக்கு (ST) ஒதுக்கப்பட்டு உள்ளன.

மகாராஷ்டிரா மாநில வாக்காளர்கள் விவரம்

மகாராஷ்டிராவில் சுமார் 9.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4.97 கோடி ஆண் வாக்காளர்களும், 4.66 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர். 1.85 கோடி இளம் வாக்காளர்கள் (வயது 18-29) உள்ளனர். இதில் 20.93 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் (வயது 18-19) ஆவார்கள்.

ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடிகள்

மகாராஷ்டிராவில் 52,789 இடங்களில் 1,00,186 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 42,604 நகர்ப்புற வாக்குச் சாவடிகளும், 57,582 கிராமப்புற வாக்குச் சாவடிகளும் அடங்கும். இதில் 299 வாக்குச் சாவடிகள் மாற்றுத்திறனாளிகளால் (PwD) நிர்வகிக்கப்படுகின்றன. பிங்க் வாக்குச் சாவடிகள் என்று அழைக்கப்படும் 388 வாக்குச் சாவடிகள் பெண்களால் நிர்வகிக்கப்படுகின்றன. 530 மாதிரி வாக்குச்சாவடிகள் உள்ளன.

மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்

நவம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ள 288 மகாராஷ்டிர சட்டசபை தொகுதிகளில் 4,140 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நேருக்கு நேர்

மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலை பொறுத்தவரை உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி), என்சிபி (சரத் பவார்) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி (Maha Vikas Aghadi) கூட்டணியும், மறுபுறம்  பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) மற்றும் என்சிபி (அஜித் பவார்) ஆகிய கட்சிகளை ஒன்றிணைக்கும் மகாயுதி கூட்டணியும் (Mahayuti Alliance) நேருக்கு நேர் மோதுகின்றன.

மேலும் படிக்க - ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் 2024: முக்கிய வேட்பாளர்கள்! நாளை ஓட்டுப்பதிவு.. முழு அட்டவணை!

மேலும் படிக்க - “இந்திரா.. இந்திரா” ஓங்கி ஒலிக்கும் குரல்.. யார் இந்த பிரியங்கா காந்தி? அவர் கடந்து வந்த பாதை!

மேலும் படிக்க - ஒரு தேர்தலில் வியூகம் வகுக்க... பிரசாந்த் கிஷோர் எத்தனை கோடி வாங்குகிறார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News