)
Karnataka Latest News: மூடா ஊழல் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய ஆளுநர் அளித்த ஒப்புதலை ரத்து செய்யக்கூறி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இது சித்தராமையாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் அரசியலை கையில் எடுத்த கர்நாடகா பாஜக, தனது முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் எனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
மூடா ஊழல் வழக்கின் பின்னணி என்ன?
மூடா என்று அழைக்கப்படும் மைசூர் நகர மேம்பாட்டுக் கழகத்தில் முதல்வர் சித்தராமையா தனது மனைவிக்கு சட்ட விரோதமாக நிலத்தை ஒதுக்கியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதுத்தொடர்பாக தனிநபர் புகார்களை அனுமதிக்க வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பிரதீப்குமார், டிஜே ஆபிரகாம், சிநேகமி கிருஷ்ணா ஆகிய மூன்று பேரும் ஆளுநரிடம் அனுமதி கேட்டிருந்தார்கள். அந்த அனுமதிக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருந்தார்.
இதை எதிர்த்து தான் கர்நாடக முதல்வர் சித்தராமையா உயர்நீதிமன்றத்திற்கு சென்றார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது மனுவில், "இந்த விவகாரம் ஆளுநர் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல. ஆளுநர் தன்னிடம் முறையாக விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அளித்த விளக்கத்தையும் பரிசீலிக்கமல், இந்த தனிநபர் புகாருக்கு வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் அளித்திருக்கிறார்" எனவே இதை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
கர்நாடக உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருப்பதற்கான காரணம் என்ன?
கர்நாடக முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் வழக்கு முடிந்தது. இன்று அந்த வழக்கின் தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் முதல்வர் சித்தராமையாவின் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது போன்ற விவகாரங்களில் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறியுள்ளது. இதன்மூலம் அரசாங்க பொதுப்பணியில் இருக்கும் ஒருவருக்கு எதிராக, ஆளுநர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு தனிநபர் புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கலாம் என்ற விஷயத்தை நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
இதனால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் கடந்த காலங்களில் பார்க்கும்போது இதுபோன்ற முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராகவும் எழுந்தது அப்போது அவர் தனது முதல்வர் பதவியை இழந்தார் மற்றும் அந்த வழக்கில் கைதும் செய்யப்பட்டார். அதே போன்ற ஒரு சூழல்தான் தற்போது சித்தராமையாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது.
கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அதை பாஜக சரியாக பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறது. முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பாஜக கடுமையாக எழுப்பி வருகிறது. அடுத்து சித்தராமையா என்ன முடிவெடுக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Karnataka CM Siddaramaiah says, "It is not a prosecution. I will discuss with legal experts & ministers how to fight this, and take a further call. We will not be scared of BJP and JD(S) conspiracy, as well as that of the Governor's office. People have blessed us. I have their… pic.twitter.com/F22JfR7lsb
— ANI (@ANI) September 24, 2024
கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அதை பாஜக சரியாக பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறது.முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பாஜக கடுமையாக எழுப்பி வருகிறது. அடுத்து சித்தராமையா என்ன முடிவெடுக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ