Tirumala Tirupathi Temple Laddu Controversy: மிகவும் பிரசித்த பெற்ற திருமலை திருப்பதி கோயில்தான் சில நாள்களாக மக்களிடையே பேசுப்பொருளாக இருந்து வருகிறது. திருப்பதி கோயில் குறித்து மக்களிடையே பேசுபொருளாக இருப்பது வாடிக்கைதான் என்றாலும் தற்போது ஒரு சர்ச்சையால் டிரெண்ங்கில் உள்ளது எனலாம். திருமலை திருப்பதி கோயில் எப்போதும் ஆன்மீகத்தில் மட்டுமின்றி அரசியலிலும் முக்கிய இடத்தை பெறும்.
அந்த சூழலில், திருமலை திருப்பதி ஏழுமலையான கோயிலில் மிகவும் புகழ்பெற்ற பிரசாதமான லட்டுதான் இந்த சர்ச்சையின் முக்கிய புள்ளியாக உள்ளது. அதாவது, அந்த லட்டுவை செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இது ஆந்திராவில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ஆன்மீக அன்பர்கள் இடையே கலக்கத்தை உண்டாக்கியுள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.
நெய்யில் கலப்படம்
அதாவது, கடந்த ஒய்எஸ்ஆர்சிபி ஆட்சிக்காலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் தயாரிக்கப்பட்ட லட்டு, குஜராத்தில் அரசு நடத்தும் பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த லட்டுவின் நெய் மாதிரிகளில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவை கலந்திருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்தன. இது ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை, கடந்த வாரம்தான் தற்போதைய சந்திரபாபு நாயுடு அரசு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
முழு பொறுப்பும் இவர்கள்தான்...
இதைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக்கு குழு அமைத்துள்ளது. முன்னதாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி மற்றும் முன்னாள் செயல் அதிகாரி ஏவி தர்மா ரெட்டி ஆகியோர்தான் கடந்த 5 ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றஞ்சாட்டுகிறது. இவர்கள்தான் அனைத்திற்கும் பொறுப்பு என்றும் தெலுங்கு தேசம் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.
ஜெகன்மோகன் அவரது ஆட்சிக்காலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தனக்கு நெருக்கமானவர்களை நியமித்திருந்ததாகவும், அதன்மூலம் அரசியல் ஆதாயங்களை தேடிக்கொண்டதாகவும் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி உள்ளார். அதுமட்டுமின்றி கோயில் அமைப்பில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளையும், முறைகேடுகளையும் தங்களின் அரசு தூய்மைப்படுத்தும் என அறிவித்தார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் திருமலையில் புனிதத்தை கெடுக்கும் வகையிலான பல செயல்களை ஒய்எஸ்ஆர்சிபி ஆட்சி செய்திருக்கிறது என சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி உள்ளார்.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஒய்எஸ்ஆர்சிபி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அந்த அறிக்கையில் ஜூலை 17 என தேதியிட்டுள்ளதே ஏன் தாமதமாக செப்டம்பரில் வெளியிட்டுள்ளீர்கள் எனவும் ஒய்எஸ்ஆர்சிபி கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் படிக்க | ‘‘திருப்பதி லட்டு விவகாரத்தில் விரிவான விசாரணை’’
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ