தாமதமாகும் காங்கிரஸ் சட்ட மன்ற கட்சிக் கூட்டம்... கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அருதி பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் இப்போது கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றக் கட்சியின் முக்கியமான கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கூட்டுவதாக தகவல் வெளியானது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 14, 2023, 06:44 PM IST
  • சட்டமன்ற கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பான எம்.எல்.ஏக்களின் கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தெரிவிக்கப்படும்.
  • புதிய முதலமைச்சர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும்.
  • போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாமதமாகும் காங்கிரஸ் சட்ட மன்ற கட்சிக் கூட்டம்... கர்நாடகாவில் பரபரப்பு! title=

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அருதி பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் இப்போது கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றக் கட்சியின் முக்கியமான கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கூட்டுகிறது. எனினும் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று மாலை 5.30 க்கு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களின் கூட்டம் நடைபெறும் என்று நேற்று காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்த நிலையில், அறிவிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கும் மேலாக கூட்டம் இன்னும் துவங்கப்படவில்லை. வெற்றி பெற்ற வேட்பாளர்களும் குறைந்த அளவே வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக கூட்டம் நடக்கக்கூடிய நட்சத்திர விடுதியில் ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது. போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் யார் என்பது குறித்தும், மற்ற முக்கிய விஷயங்கள் குறித்தும் சட்டப்பேரவை கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் கட்சி மேலிட பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது. கர்நாடக முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சி, கட்சியின் மூத்த தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் ஆகியோர் பார்வையாளர்களாக நியமனம் செய்துள்ளது. இன்று மாலை பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மேலிட பார்வையாளர்கள் கலந்து கொண்டு எம்.எல்.ஏக்களின் கருத்துகளைக் கேட்டறிவர் என கூறப்பட்டது.மேலும் படிக்க |  Karnataka Election Results 2023: எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெற்றது - முழு பட்டியல் இதோ!

அனைத்து தரப்பையும் திருப்தி படுத்த 2 முதல் 3 துணை முதல்வர்கள்

அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தும் வகையில் அரசாங்கத்தில் 2 முதல் 3 துணை முதல்வர்களை கட்சி தேர்ந்தெடுக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கான அறைகள் பெங்களூருவில் உள்ள இரண்டு தனியார் ஹோட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் சனிக்கிழமை இரவுக்குள் மாநில தலைநகரை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்  நேற்று (மே 13) வெளியாகின. காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று 135 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த முறை 37 தொகுதிகளை பிடித்த ஜேடிஎஸ் கட்சி இம்முறை 19 இடங்களையே கைப்பற்றியுள்ளது. பிற கட்சிகள் மற்றும் சியேச்சை 4 இடங்களை கைப்பற்றியுள்ளது.

தேர்தலில் 73.19% வாக்குகள் பதிவாகின

கர்நாடக சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த புதன்கிழமை (மே 10) நடைபெற்றது. 73.19% வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே, காங்கிரஸ் பெரும்பான்மை வலுவுக்கு தேவையான இடங்களை விட அதிக அளவில் முன்னணியில் இருந்த போதே, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தோல்வியை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | சட்டமன்ற கட்சி கூட்டத்திற்கு முன்பு மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்த சித்தராமையா! வலுக்கும் ஊகங்கள்!

மேலும் படிக்க | 3 ஆண்டுகள் தூக்கமில்லை... கண்ணீர் விட்டு கதறிய டி.கே. சிவகுமார் - கிடைக்குமா முதல்வர் அரியணை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News