லக்னோ: உபி., மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் வெள்ளிவிழா ஆண்டின் துவக்கவிழா லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சரத் யாதவ் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும் கலந்து கொள்வதற்காக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் லக்னோ சென்றடைந்தார்.
சமாஜ்வாடி கட்சியை வலுப்படுத்த உத்தர பிரதேசத்துக்கு வர உள்ளதாகவும் பீகாரைப்போன்று இங்கும் பாரதீய ஜனதாவை விரட்டுவோம் என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், உ.பி. முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்ற லாலு பிரசாத் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சமாஜ்வாதி கட்சியை பலப்படுத்துவதற்காகவே நாங்கள் அனைவரும் இங்கு வந்திருக்கிறோம். பீகாரில் இருந்து பா.ஜ.க.வை விரட்டி விட்டோம். அதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்தும் பா.ஜ.க.வை நாங்கள் விரட்டியடிப்போம் என லாலு கூறினார்.