புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காலத்தில், மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, தடுப்பூசி போட்டுக் கொண்டதன் அடிப்படையில் அனுமதி வழங்குவது குறித்து விவாதம் நடைபெறுகிறது. WHO அதாவது உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிகளின் பட்டியலைத் தயாரித்து வருகிறது,. தற்போது பரிசோதனை முடிவு நெகடிவ் இருந்தால் பயணம் மேற்கொள்ளலாம் என்ற நெறிமுறை அமலில் உள்ள நிலையில், வருங்கலாத்தில், தடுப்பூசி போட்டுக் கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு அனும்தை வழங்குவது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விஷயம் உலக சுகாதார அமைப்பில் விவாதத்தில் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது, ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
இதுவரை பரிசோதனை பற்றி மட்டுமே வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. "இதுவரை வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் பரிசோதனைக்கு மட்டுமே. அதாவது பயணத்திற்கு முன்பு கொரோனா தொற்று பரிசோதனை நெகடிவ் என இருக்க வேண்டும் இருப்பதுதான். தடுப்பூசி விவகாரத்தில் WHO அமைப்பில் இப்போது ஒருமித்த கருத்து ஏதும் இல்லை, இருப்பினும் இது தொடர்பான விவாதம் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது" என சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.
ALSO READ | COVID-19: கருப்பு பூஞ்சையை அடுத்து பீதியை கிளப்பும் வெள்ளை பூஞ்சை
WHO அவசரகால பயன்பாட்டு பட்டியலில் (EUL) சேர்க்கப்படும் தடுப்பூசிகளின் பட்டியலைத் தயாரிக்கிறது. அந்த தடுப்பூசிகள் பட்டியலில் சேர்க்கப்படும், தடுப்பூசிகளை எடுத்துக்கொள்பவர்கள் பிற நாடுகளுக்கு செல்ல தகுதியுடையவர்கள், அவர்கள் மீண்டும் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதில்லை.
உலக சுகாதார அமைப்பு இதுவரை உருவாக்கிய பட்டியலில், அஸ்ட்ராஜெனெகாவின் ஒரு பெயர் உள்ளது, ஆனால் கோவாக்சின் பெயரிடப்படவில்லை. அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி இந்தியாவில் சீரம் நிறுவனம், கோவிஷீல்ட் என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. COVAXIN தடுப்பூசியின் பெயர் இறுதி பட்டியலிலும் சேர்க்கப்படாவிட்டால், இந்தியாவில் அதனை போட்டுக் கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் வெளிநாட்டு பயணம் கேள்விக் குறியாகலாம்.
ALSO READ | சமூக ஊடகங்களில் ‘இந்திய திரிபு’ என குறிப்பிடும் பதிவுகளை நீக்க வேண்டும்: மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR