பள்ளிகளுக்கு டிசம்பர் 31 முதல் ஜனவரி 14 வரை விடுமுறை

தற்போது மாநில முழுவதும் ஒரே நேரத்தில் குளிர்கால விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த குளிர்கால விடுமுறை உத்தரவு I முதல் VIII வகுப்புகளுக்குப் பொருந்தும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2021, 06:11 PM IST
பள்ளிகளுக்கு டிசம்பர் 31 முதல் ஜனவரி 14 வரை விடுமுறை title=

லக்னோ: உத்தரபிரதேசத்தில் டிசம்பர் 31 முதல் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அளிக்கப்படுகிறது. முதன்முறையாக பள்ளிகளுக்கு இதுபோன்ற விடுமுறையை கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை ஜனவரி 14 வரை இருக்கும். முன்னதாக, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பல்வேறு மாவட்டங்களில் அல்லது மாநில அளவில் குளிரின் தாக்கம் பொருத்து சில இடங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாநில முழுவதும் ஒரே நேரத்தில் குளிர்கால விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த குளிர்கால விடுமுறை உத்தரவு I முதல் VIII வகுப்புகளுக்குப் பொருந்தும்.

ஆகஸ்ட் 14, 2020 அன்று, கூடுதல் தலைமைச் செயலாளர் அடிப்படைக் கல்விச் செயலாளர் ரேணுகா குமார், மாநிலத்தின் அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்களுக்கு அனுப்பிய கடிதத்தில், Mission Prerna இலக்குகளை அடைய வேண்டியது மிக அவசியம் என்று வலியுறுத்தி இருந்தார். ஆசிரியர்கள் வகுப்பறை கற்பித்தல் பணிகளிலும், மாணவர்களுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய பணிகளிலும் அதிக நேரத்தை செலவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தர். இத்தகைய சூழ்நிலையில், டைம் அண்ட் மோஷன் கற்றலின் (Time and Motion Study) கீழ் சிறந்த கல்விச் சூழலைக் கொடுப்பதற்காக, பள்ளிகளை சரியான நேரத்தில் திறக்கவும் மூடவும் மற்றும் கோடை, குளிர்கால விடுமுறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ALSO READ | பள்ளி, மால், சினிமா ஹால் செயல்படாது.. கடும் கட்டுப்பாடுகள் விதித்த மாநில அரசு

ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை காலை 8 மணி முதல் இரண்டு மணி வரையிலும், அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரை காலை ஒன்பது முதல் 3 மணி வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்றும், பள்ளிகளுக்கு டிசம்பர் 31 முதல் ஜனவரி 14 வரை குளிர்கால விடுமுறையும், மே 20 முதல் ஜூன் 15 வரை கோடை விடுமுறையும் இருக்கும். புதிய கல்வியாண்டு ஜூன் 16-ம் தேதி தொடங்கும் என முடிவு செய்யப்பட்டது. 

ALSO READ |  டெல்டாவை விட வேகமாக பரவும் ஒமிக்ரான்: WHO எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News